இந்தப் பிரச்சினை இப்போது கொஞ்சம் அளவு கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அது எனக்கும் நன்றாகவே தெரிகிறது. ஆனால் எப்படி இதிலிருந்து மீளுவதென்று தெரியவில்லை. சின்னப் புள்ளத்தனமாத்தான் இருக்கு. ஆனா என்ன செய்யுறதுன்னு தெரியலையே.... அப்படி என்னதான்டா உன் பிரச்சினைன்னு கேக்குறீங்களா? தேவையில்லாத பொருட்களா வாங்கிக் குவிக்கிற ஆசைதாங்க அது. அப்படி என்னத்தடா வாங்கிக் கிழிச்சேன்றீங்களா? இந்தப் பிரச்சினை முதல்ல லாப்டாப்பிலேருந்து தொடங்குச்சுங்க. முதல்ல என் தம்பி எனக்கு ஒரு லாப்டாப் பரிசா கொடுத்தாங்க. அத வச்சு ஒரு வருசம் ஓட்டுனேங்க.
அப்புறம், தினமும் வீட்டிலேருந்து லேபுக்கு தூக்கிட்டுப் போக முடியலேன்னு வீட்டுக்குன்னு என்னோரு லாப்டாப் வாங்கினேங்க. அப்புறமா ஒரு வருசம் கழிச்சு அவ்வளவா உபயோகிக்கலேன்னு அத 12ம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்த என் அக்கா பையனுக்கு கொடுத்துட்டேங்க. அப்பவாவது அறிவு வந்து நிப்பாட்டிருக்கனும். விட்டனா, சல்லீசா வருதேன்னு இன்னோரு 13 இன்ச் லாப்டாப் வங்கினேன். இப்ப அந்தப் பழைய லாப்டாப்பை டிவியோட கனெக்ட் பண்ணி யூடியூப்ல படம் பார்க்கன்னு வச்சுக்கிட்டேங்க. அப்புறமா டிரெய்ன்ல படிக்க மட்டும் வேணும்னு ஒரு கிண்டில் வாங்கினேங்க. அதாவது கொஞ்சம் யூஸ் ஆச்சு. அதுக்கு அப்புறமா ஒண்ணு வாங்கினேன் பாருங்க... கொடுமை. ஒரு டிஜிட்டல் வாய்ஸ் ரெக்கார்டர். அத இன்னும் ஒரு தடவ கூட யூஸே பண்ணலைங்க. அத ஏன் வாங்கினேன் எதுக்கு வாங்கினேன்னு எனக்கே இது வரைக்கும் புரியல. இதுக்கு ஊடால லாப்டாப் எல்லாம் வெயிட் அதிகமா இருக்குன்னு சொல்லி ஒரு நெட்புக்கும் வாங்கி வச்சுருக்கேன். இப்ப அது பத்திரமா கப்போர்டுக்குள்ள கிடக்குங்க. அதுக்கு
அப்புறமா ஒரு இன்டர்நெட் புளூரே பிளேயர் வாங்கி டிவியோட கனெக்ட் பண்ணீட்டேன். இப்போ அந்தப் பழைய லாப்டாப் சும்மாத்தான் கிடக்குங்க. இதோட விட்டனா... யுஎஸ்ல வாட் கிடையாதுன்னு ஒருத்தர் சொன்னாருன்னு, இப்ப ரெண்டு வாரத்துக்கு முன்னாடி யுஎஸ் போன நண்பர் ஒருத்தர் கிட்டச் சொல்லி ஒரு ஐபேடும் வாங்கியாச்சு. இதுக்கு நடுவிலே சில பல ஸ்மார்ட் போன்களும் வாங்கியாச்சு. புதுசா ஏதாவது ஒரு பொருளப் பார்த்தாலே கை பரபரன்னு அரிக்க ஆரம்பிச்சுடுதுங்க. அத வாங்கி வீட்டுல அடுக்குனாத்தாங்க அந்தப் பதட்டம் குறையுது. இது எதுல போய் முடியுமோன்னு பயமா இருக்குங்க. ஏதாவது உருப்படியான யோசனை இருந்தா சொல்லுங்களேன்...
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
சரி சார், வாங்கிய பொருட்களை எல்லாம் எனக்கு இலவசமாகவோ அல்லது பாதிக்குப் பாதி விலையிலோ கொடுத்து விடுங்களேன்.
7:40 PMசெம ஐடியாங்க... பாருங்க என் கைஅரிப்பே நின்னு போச்சு :-)
1:44 PMகருத்துரையிடுக