5. ட்ராய்...
வெள்ளி, ஜனவரி 13, 2006
கேபிள் டிவியில் லகான் படம் போட்டார்கள். பார்த்து நிறைய நாட்கள் ஆகியிருந்தாலும் படம் நன்றாகவே இருந்தது.(இங்கிலீஸ் சப் டைட்டில் உபயம்). நேற்று ட்ராய் ஆங்கிலத்தில் (ஆங்கிலப் படத்தை வேறு எதில் போடுவார்கள்!!) போட்டார்கள். ஏற்கெனவே பார்த்த படம்தான். நான் பார்த்த படங்களிலேயே மிகச் சிறந்த படமாக இதனைக் குறிப்பிடலாம். போரைத் தவிர்க்க நடக்கும், ஒண்டிக்கு ஒண்டி சண்டையில் ஓடி வந்து, எதிரியின் தோள் பட்டையில் , வாளை செருகும் அக்கிலீஸ் (பிராட் பிட், கன கச்சிதமான தேர்வு) ஏற்படுத்தும் அந்த பிரமாண்டம், படத்தின் இறுதிக் காட்சி வரை ச்ற்றும் குறையாது படமாக்கியிருக்கிறார்கள். இறந்த மகனின் சடலத்திற்காக, அக்கிலீஸிடம் கையேந்தும் டிராய் மன்னன், திரும்பி வர மாட்டான் எனத் தெரிந்தே மகனை போருக்கு அனுப்பும் அக்கிலீஸின் தாய், விதி மீறல் என்று தெரிந்தே, தம்பியை காப்பாற்றத் துணியும் இளவரசன் (எரிக் பானா, பிராட் பிட்டிற்கு சரியான சவால்) என ஒவ்வொரு படைப்புமே அற்புதம். கவிதை போன்ற வசனங்கள், கண்ணை உறுத்தாத ஒளிப் பதிவு, காதை உறுத்தாத இசை, தேர்ந்த நடிக, நடிகையர் என எல்லா விதத்திலும் கலக்கியிருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் தவற விடாதீர்கள்.
அன்புடன்,
இராம்.
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்துகள்:
நிஜமாகவே நல்ல படம். அதிகம் ஆங்கிலப் படம் பார்க்காத நான் நண்பரின் வற்புறுத்தலால் இதைப் பார்த்து விட்டு வந்து ஒரு வாரம் போல கிரேக்க வரலாறை ஆராய்ந்து கொண்டிருந்தேன். சரித்திரம் விரும்புவோர், போர்கள் விரும்புவோர், miss பண்ணாமல் பார்க்க வேண்டிய படம்.
8:24 PMகருத்துரையிடுக