வயது அதிகமாகிக் கொண்டே போவதை நினைவு படுத்தும் சமாச்சாரமாக இருப்பதால், நான் பிறந்த நாளெல்லாம் கொண்டாடுவதில்லை. பெற்றோரும், உடன்பிறந்தோரும் ஃபோனில் வாழ்த்துச் சொல்லும் போதுதான் அன்று பிறந்த நாள் என்பதே நினைவுக்கு வரும்.
பிறருடைய பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் அதிகமாகக் கலந்து கொண்டதில்லை. (என் தம்பியுடையதைத் தவிர... காரணம் அவன் பிறந்த தினம்... டிசம்பர் 25). இங்கே நண்பி ஒருவர் அவருடைய பையனின் 3 வது பிறந்த நாள் விழாவிற்கு அழைத்த போது, இங்கே எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்க்கும் ஆவலில் ஒப்புக் கொண்டேன்.
விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்னர், என்னவெல்லாம் தேவைப்படும் என்று கணக்கிட்டு வாங்கி விட்டார். 150,000 உகாண்டன் சில்லிங்ஸ், கிட்டத்தட்ட 3750 ரூபாய். அவர்கள் உரைப்பு அதிகம் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.எனவே எனக்காக சில்லி சாஸ் வாங்கிக் கொண்டார்.
நான் தங்கியிருக்கும் சிற்றூரிலிருந்து 6 கி.மீ தொலைவிலிருக்கும் கிராமத்தில்தான் விழா. நண்பிதான் அந்த ஊரில் வசதியானவர் என்பதால், கிட்டத்தட்ட 100 பேர் வரை அழைத்திருந்தார். நான்கு மணிக்கு விழா தொடங்கியது. முதலில் ஒரு பாதிரியார் ஜெபம் செய்து விழாவைத் தொடங்கி வைத்தார்.பின் விழாவுக்கு வந்திருந்த அனைவரும் ஒவ்வொருவராக எழுந்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். பையனின் அம்மா தன்னையும், பையனையும் அறிமுகப் படுத்தினார். அம்மா பெயர் Faith, மகன் பெயர் Innocent. அப்பா பெயரைப் பற்றி யாரும் அலட்டிக் கொள்ள வில்லை.
பையன் சிசேரியன் மூலமாகப் பிறந்தவன் என்பதைப் பையனின் தாத்தா நினைவு கூர்ந்தார். பின்னர் இசை ஆரம்பமாகியது. சிறுவர்கள் எழுந்து ஆடத் தொடங்கினர். நன்றாக ஆடும் சிறுவர்களை ஊக்குவிக்க சிலர் அவர்கள் பையில் பணம் சொருகினர். இது அரை மணி நேரம் நடந்தது.
பின் அன்பளிப்புகளை வழங்கும் நிகழ்ச்சி. ஒரு சிறு டேபிளில் ஒரு தட்டு வைத்து, பக்கத்தில் பையன் அமர்ந்திருக்க, ஒவ்வொருவராகச் சென்று அன்பளிப்புகளை வழங்கினர். அன்பளிப்புகளை வாங்கி வராதவர்கள் அந்தத் தட்டில் பணத்தை வைத்துச் சென்றனர். பின்னர் கேக் வெட்டினான் பொடியன். நம்மூர் குலவைச் சத்தம் போலவே சத்தம் எழுப்பினர் கிராமப் பெண்மணிகள்.
விருந்து தொடங்குவதற்கு முன்னர் மறுபடியும் பாதிரியார், மீண்டும் ஜெபம். பின்னர் விருந்து தொடங்கியது. Buffet. நம்மூர் போண்டா மாதிரி ஒரு Item , ஆப்பிரிக்க சப்பாத்தி (முழு சப்பாத்திக்கல் சைசில், அரை இஞ்ச் தடிமனில் ஏதேனும் பரிமாறப் பட்டால் அது ஆப்பிரிக்க சப்பாத்தி என்று அறிந்து கொள்க), நம்மூர் பிரியாணி கலரில், மாட்டிறைச்சி கலந்த சோறு, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் கோழிக்குழம்பு (உரைப்பே இல்லாமல், மசாலா எதுவும் கலக்காமல்) பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் சோடா(குளிர்பானங்களை இங்கே இப்படித்தான் அழைக்கிறார்கள்) வைக்கப் பட்டிருந்தன. பெரியவர்கள் வரிசையாகச் சென்று எடுத்து கொண்டனர். பெரிய தட்டுகளில் நிறைய வைக்கப் பட்டு ஐந்தாறு சிறுவர்களுக்கு மொத்தமாக வைக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஆறு மணியளவில் விழா இனிதே முடிவடைந்தது. விழா ஆரம்பித்ததிலிருந்து, முடியும் வரை பையன் என்னை ஒரு மாதிரியாகவே பார்த்துக் கொண்டிருந்தான். நான் கிட்டத்தட்ட அவர்கள் கலரில் இருந்தாலும், முடி இருப்பதால் பையனுக்கு நான் வினோதமான ஜந்துவாகத் தெரிந்திருக்கிறேன். கடைசியில் பையனின் அம்மா நான் ஒரு Muzungu என்று அறிமுகப் படுத்திய பின்தான் சந்தேசமாக ஒட்டிக்கொண்டான். Muzungu என்றால் யாரென்று கேட்கவில்லையே..Muzungu என்றால் வெள்ளைக்காரன் என்று அர்த்தம்.
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
11 கருத்துகள்:
சபாஷ் வெள்ளைக்காரா:-))))
7:10 AMஅநேக இடங்களில் இப்படித்தான் குழந்தைகளின் பிறந்தநாள் நடக்கின்றது.
உணவு அயிட்டம்தான் வெவ்வேறு.
வாங்க (அப்பாவி) துளசி மேடம்,
1:58 PMஇங்கு சில விவரமான குழந்தைகளும் இருக்கின்றன. Muzungu என்று சொன்னால் இந்தியர்கள் குஷியாகி விடுவார்கள் என்று அவைகளுக்குத் தெரியும். எனவே Muzungu, Muzungu என்று சிலமுறை கூப்பிட்டு விட்டு, கடைசியில் Uncle பைசா என்று கையை நீட்டுவார்கள்.
வருகைக்கு நன்றி,
இராம்ஸ்
ஏதோ நாம்தான் வெள்ளைக்காரனைப் பார்த்து பரவசப்படுவோம் என்றில்லை; நம்மைப் பார்த்தும் பரவசப்பட ஆட்கள் இருக்கிறார்களே :))
12:41 AMநிழற்படங்கள் நன்றாக உள்ளன;கொஞ்சம் over exposure போல இருக்கிறது.
சபாஷ் Muzungu (வெள்ளையதேவா) ,
7:27 AMசரி பார்ட்டில பாத்தி கட்டுன மேட்டர் எல்லாம் கானோம். :-).
// கடைசியில் Uncle பைசா என்று
அனுபவம் பேசுது போல.
நன்றி லண்டன்காரரே,
1:58 AMஇங்கே 24 மணி நேரம் Power cut.இன்னிக்கு சாயங்காலம் 6 மணிக்கு போச்சுன்னா நாளைக்கு சாயங்காலம் 6 மணிக்குதான் Power வரும். அதான் நிறைய எழுதி உங்களை கொடுமைப் படுத்த முடியல :-)
வாங்க மணியன் சார்,
2:01 AMநம்மளைப் பார்த்தும் பரவசப் படுறதுக்கு ஆளுங்கல்லாம் நிறைய இருக்காங்க இங்கே. இந்தியர்களை Muyindiன்னு கூப்பிடுவாங்க
அய்யா ராம்ஸ்,
4:49 AMஇங்க பாரு. இந்த பதிவுல இருக்குற காவாக்கு அந்த பக்கம் இருக்குற மிச்சிகன் லேக் பக்கத்துலதான் உமக்கு சிலை வைக்கலாம்ன்னு இருக்கேன்.. எப்படி வசதி :-)
Hey.. vellaikkara paiya..ugaanda anubavatha ippadi azhaga ezhuthi kalakiraye raamu.. keep it up ma..
5:17 PMலண்டன்காரரே...
4:21 AMஇவங்க இன்னும் நம்ம நிலைக்கு வர்ரதுக்கே நிறைய வருசம் ஆகும். வந்த புதுசுல ஜெனரேட்டர்லாம் Use பண்ணிக்கிட்டு இருந்தேன்... சத்தம் அதிகமா இருக்கிறதனாலேயும், இந்த மாதிரி வாழ்க்கை பழகிட்டதினாலேயும் இப்பல்லாம் Use பண்றதில்லை.
கூட்டாளி ஜெயந்த்,
4:25 AMலொக்கேசன்லாம் O K தான். நம்ம அழகைப் பார்த்து வெள்ளைக்காரிங்கல்லாம், உணர்ச்சி வசப்பட்டா ட்ராபிக் ஜாமாயிடுமேன்னுதான் யொசிக்கிறேன்.. சரி சிலை திறப்பு விழாவுக்கு ஏஞ்சலினா ஜூலியைக் கூப்பிடுவீங்கதானே.. :-)
ராசா...
4:29 AMபாராட்டுக்கு நன்றி.. காசியைப் பத்தி நிறைய எழுது... அடிக்கடி எழுது...
கருத்துரையிடுக