இந்தியாவில் இருந்த போது, உலகிலேயே அங்கேதான் லஞ்சம் அதிகமாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கே வந்த பின்பு, இந்தியா எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது. ஏதெனும் திருட்டு போய் விட்டது என்று புகார் கொடுக்க காவல் நிலையம் சொன்றால், புகாரை வாங்குவதில் ஆரம்பிக்கும் உங்கள் தண்டச் செலவு. வெளிநாட்டவர் என்றால் ஸ்பெசல் ரேட். உள்ளூர்காரர்களுக்கு கொஞ்சம் தள்ளுபடி கிடைக்கும். புகாரை வாங்கின மறுநாளே, கடமையே கண்ணாயிணாராக காலங்கார்த்தால் உங்களைச் சந்திக்க ஒரு கான்ஸ்டேபில் வருவார்.
"எங்க பாஸ் உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னார்"
அவனுடைய பாஸிற்கும், நம்மூர் கொள்ளைக்கூட்ட பாஸிற்கும் ஆறு வித்தியாசங்களைக் கூட காண முடியாது. அத்தகைய "பாஸ்" எனப்படுபவர் ஒரு C.I D. ஏதேனும் காணாமல் போய் விட்டதென்று புகார் கொடுத்திருந்தால், அதைத் திருடியதே நாம்தான் என்று ஆரம்பிப்பார். அதாவது, காணாமல் போனது எங்கே என்று அவரை நாம் கேட்டால், எது எங்கே இருக்கிறது என்று அவர் நம்மைத் திருப்பிக் கேட்பார்.
நான்கு காஸ்டேபில்கள் அவரது அடியாட்கள் மாதிரி உங்களைச் ச்ற்றி வந்து, நீங்கள்தான் திருடிவிட்டீர்கள் என்று கோஷம் போடுவார்கள். இவரைத் தூக்கி உள்ளே போடுங்கள் என்று சொல்லி விட்டு, பாஸ் வெளியே போய் விடுவார். சுற்றி இருக்கும் நான்கு அல்லக் கைகளில், ஒன்று, எவ்வளவு வைத்திருக்கிறாய் என்று ஆரம்பிக்கும். காய்கறிக்கடை போல் பேரம் பேசி, ஆளுக்கு 5000 ஷில்லிங்ஸ் கொடுத்தால், இன்று உன் வீட்டில் தூங்கலாம் என்று ஆசை காட்டி முடிப்பார்கள்.
இது முதல் நாள், இரண்டாம் நாள் ஒரு கான்ஸ்டேபில் பவ்யமாக உங்களைப் பார்க்க வருவார். திருடன் என்று ஒருவனைச் சந்தேகப் படுகிறோம். அவன் இப்போது 150 கி.மீ தள்ளி இருக்கும் ஒரு ஊரில் இருக்கிறான். அவனைப் போய் பிடித்து விசாரிக்க போக்குவரத்துச் செலவுக்கு 100,000 கொடுங்கள் என்று அதிகாரமாக வழிவார்கள். பின் இரண்டு நாட்கள் கழித்து, அது அவனில்லை என்று சொல்லி விடுவார்கள். கடைசியில், நீ இதை இன்ஸூரன்ஸில் க்ளெய்ம் செய்து வாங்கிக் கொள் என்று ஒரு ரிப்போர்ட் கொடுத்து விடுவார்கள். கடைசியி பார்த்தால், நாம் தொலைத்ததை விட அவர்களுக்குத்தான் அதிகமாகத் தண்டம் அழுதிருப்போம். அதனாலோ என்னவோ, இங்கே நிறைய பேர் தொலைத்தாலோ, திருடு போனாலோ போலீஸிடம் போவதே இல்லை.
அடுத்த கொள்ளைக் காரர்கள், குடியேற்ற உரிமை ஆட்கள். இங்கே யாராவது இந்தியர்களைப் பார்த்தாலே அவர்களுக்கு கொண்டாட்டம் வந்துவிடும். காரணம் 100க்கு 80 குஜராத்திகள் சட்ட விரோதமாகத் தங்கி இருப்பவர்கள். இவர்கள் சற்று பணக்கார கொள்ளையர்கள். டாலரில்தான் டீல் செய்வார்கள். முறையான உரிமம் இருந்தாலும் வந்து தொல்லை கொடுக்கத்தான் செய்கிறார்கள். என்னிடம்தான் முறையான உரிமம் இருக்கிறதே என்று காட்டினாலும் விட மாட்டார்கள். சாய் மணி கொடு, வந்து விட்டோம் ஏதாவது கொடு என்று வழிவார்கள். உரிமம் இருந்தால் கொஞ்சம் தைரியமாகப் பேசலாம். இல்லையென்றால் டாலரில் மொய் எழுதிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
அது இது என்று இல்லை. எங்கேயும் லஞ்சம் எதிலும் லஞ்சம். யாராவது உகாண்டன் தாத்தா வந்து, வர்ம அடி கொடுத்தால்தான் உண்டு.
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
10 கருத்துகள்:
ராம்ஸ், இந்தியாவில் லஞ்சம் வாங்கும் போது குற்ற உணர்வோடு வாங்குகிறார்கள்.
3:23 AMசிரியா/லெபனான்/ஜோர்டான் மற்றும் சில ஆப்பிர்க்க நாடுகளில் லஞ்சம் என்பது சட்டம்
வாங்க சிவா சார்,
3:39 AMசட்டத்தை மீறுவதற்குத்தானே லஞ்சம்...சட்டப் படி லஞ்சம்னா எப்படி?
தகவலுக்கு நன்றி சார்.
அன்புடன்,
இராம்ஸ்
//இந்தியாவில் லஞ்சம் வாங்கும் போது குற்ற உணர்வோடு வாங்குகிறார்கள்.
5:15 AM//
சிவா, நீங்க இன்னும் 19ம் நூற்றாண்டுலயே இருக்கற மாதிரி தெரியுது! :)
ஆர்.டீ.ஓ. அல்லது ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ் போன அனுபவம் உண்டா. அதிகாரமா கேட்டு வாங்கறாங்க லஞ்சத்தை. நாம தான் ஏதோ கொலைக் குத்தம் செஞ்சிட்ட மாரி அவங்கக் கிட்ட கூழைக் கும்பிடு போட்டு கெஞ்சிக்கிட்டு நிக்க வேண்டியிருக்கு! பிச்சை வாங்கறது என்னவோ அவங்க. ஆனா நம்மளை பிச்சைக் காரன் மாதிரிதான் நடத்தறாங்க. ஒரு தரம் போய்ப் பாருங்க.
இந்தியன் படத்துல வர்ற "ஆப்பீஸர் ஸார்" எல்லா இடத்துலயம் நீக்கமற நிறைஞ்சிருக்காங்க.
ராம்ஸ்,
9:00 AMஎன்ன இது சொந்த சரக்கா.. சோக கதையான்னு கேட்டேன்..
வாக்கபட்டு போன இடத்துல சூதானமா , நாலு பேரை அனுசரிச்சி போகணும்ன்னு இதையா சொன்னங்க.. அட கடவுளே..
//100,000 கொடுங்கள்
அவ்வளவு செலவாகுமா ? .
கொடுமைங்க!!!
10:07 AMஅடக்கடவுளே..... அங்கேயுமா?
11:27 AMஅதுசரி, உங்க ஊர்க்காசு இந்திய மதிப்புலே எவ்வளோன்னு சொல்லக்கூடாதா?
5000ன்னதும் பிரமிப்பா இருந்துச்சு.
அப்புறம் தேடுனதுலே கிடைச்சது
அது இந்தியாக்காசுலே
5,000.00 UGX
Uganda Shillings = 126.511 INR
India Rupees
வாங்க சுந்தர்,
1:34 AMதாசில்தார் ஆபீஸையும் சேர்த்துக்குங்க...
வருகைக்கு நன்றி,
இராம்ஸ்
ஆகா, தலைன்னா தலைதான்பா.. எப்படி கரெக்ட்டா கண்டு பிடிச்ச தல..
1:41 AM100,000 ம்ன உடனே பயந்திட்டியே தல.. அது கிட்டத்தட்ட நம்மூரு 2500 ரூபாய்.
அப்புறம் உன் அட்வைசுக்கு கரீட்டா மருவாதி கொடுத்தேன் பார்த்தியா தல..
வாங்க பொன்ஸ்,
1:47 AMகொடுமைதான்... வேற வழியில்லை... நம்ம நாட்லேயே நம்மளால ஒன்னும் பண்ண முடியல... ஆப்பிரிக்கால என்ன பண்ண முடியும்... அப்படியே அப்பப்ப கொஞ்சம் தண்டம் அழுதுட்டு போயிட வேண்டியதுதான்.
வருகைக்கு நன்றி,
இராம்ஸ்
வாங்க மேடம்,
1:55 AM//அடக்கடவுளே..... அங்கேயுமா?//
நல்லா கேட்டீங்க போங்க... இங்கே லஞ்சம் இல்லாத இடமே இல்லை.
//5000ன்னதும் பிரமிப்பா இருந்துச்சு.//
இந்தியால யாராவது எவ்வளவு சம்பளம்னு கேட்டா இப்பல்லாம் மில்லியன்லதான் சொல்றது. மில்லினியர்னு நினைச்சுக்கிடட்டுமேன்னுதான் :)
கருத்துரையிடுக