நான் திரும்ப எழுதும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மிரட்டிய கோடிக்கணக்கான வாசகர்களுடைய வேண்டுகோளுக்கிணங்கி இன்று முதல் திரும்ப எழுத ஆரம்பித்திருக்கிறேன்...(கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டேனோ...!)
போன தடவை பிளேடைப் போட்டப்ப உகாண்டால இருந்தேன்... கொஞ்சம் மொக்கையா இருந்தாலும் பரவாயில்லை, பையன் உகாண்டாவைப் பத்தி எழுதுறானேன்னு எக்கச்சக்கமான பேர் (சரியா நாலு பேர்! அதுல ரெண்டு பேர் வழி தெரியாம உள்ளே வந்து மாட்டினவங்க...!) என்னோட பதிவு பக்கமா வந்துக்கிட்டு போயிக்கிட்டு இருந்தாங்க. இதுல நான் வேற ரொம்ப நாளா, எழுத முடியாத அளவுக்கு ரொம்ப பிஸியா இருந்தனா, அவங்களும் வந்து வந்து பார்த்துட்டு ஏமாந்து போய், இப்பல்லாம் என் பதிவை எட்டிப்பாக்குறதையே விட்டுட்டாங்க...(நான் எழுதியிருந்தாலும் அதைப் படிச்சுட்டு ஏமாந்துதான் போயிருப்பாங்கன்றதெல்லாம் வேற விசயம்...) கொஞ்சம் பிஸியா இருக்கிற மாதிரி ஆக்ட் குடுத்தா, இதுதான் சாக்குன்னு, இப்படியெல்லாமா பண்ணுறது...என்னது இது...சின்னப்புள்ளத்தனமா இருக்கு...
ஆகவே பெரியோர்களே, தாய்மார்களே... வாலிப, வயோதிக அன்பர்களே...எனது நண்பர்களே... உங்க எல்லோருக்கும் நான் இந்த மொக்கை பதிவு மூலமா சொல்லிக்கிறது ஒன்றே ஒன்றுதான்... நான் இப்பொழுது உகாண்டாவில் இல்லை. என்னை மேன்மை பொருந்திய மகாராணி ஆட்சிபுரியும் சூரியன் அஸ்தமிக்காத தேசத்திற்கு நாடுகடத்தி விட்டனர். (சாயங்காலம் மூன்றரை மணிக்கெல்லாம் இருட்டீருது, இதுக்கு இவனுங்க வெச்ச பேரப் பாத்தீங்களா.?வெள்ளைக்காரனுங்களுக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்திதான்). எனவே அலைகடலென திரண்டு எனது வலைப்பதிவுக்குள் வாரீர்... உங்கள் பொன்னான ஆதரவைத் தாரீர்... நன்றி, வணக்கம்.
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
8 கருத்துகள்:
வந்துட்டோம். ஆதரவைத் தந்துட்டோம். இனிமேலாவது பதிவை எழுதுங்க! :))
3:23 PMWhere were you in Uganda, Kampala,Jinja,Mbale,Masaka,Kasese,
3:32 PMArua,Mbaraa or Mukono?
//ஆகவே பெரியோர்களே, தாய்மார்களே... வாலிப, வயோதிக அன்பர்களே...எனது நண்பர்களே//
4:24 PMஇதுல குட்டி பாப்பாக்களே ன்ன வரி விட்டுப்போச்சு,இப்போ இங்க குட்டிபாப்பாக்கள் இரு கேங் ஆயிட்டாங்க ராம்ஸ் மாமா
அலைகடலென திரண்டு வந்த கொத்ஸ், நிலா மற்றும் அனானிக்கு (சத்தியமா அது நானே எழுதின பின்னூட்டம் இல்லீங்க...) நன்றி, நன்றி, நன்றி....
8:48 PMநான் உகாண்டால குப்பை கொட்டிக்கிட்டு இருந்தது பாலேலங்க (Mbale). போனீங்கன்னா ரிபப்ளிக் தெருல இன்னும் அந்த குப்பைமேட்டைப் பார்க்கலாம்....:
ஆகா, உகாண்டா லேந்து இங்கிலாந்து பணி மாற்றம். அதனாலே இனிமே பதிவுகள் வரும். வாழ்த்துகள். வந்துட்டேன். வாழ்த்திட்டேன். அடிக்கடி வரேன். எழுதுங்க
11:14 PMஅடுத்த அலைகடல் ஆதரவைத் துவக்கிவைத்த அண்ணன் சீனா அவர்களை வருக, வருகவென அன்புடன் அழைக்கின்றோம்...
12:33 AMபணி மாற்றம்லாம் இல்லீங்க... நான் திரும்ப யூத்தா மாறிட்டேங்க... புரியலையா? போங்க.. எனக்கு வெக்கம் வெக்கமா வருது...
நான் இப்போ ஸ்டூடண்ட்டுங்கோ...
மாணவனாக மாறி கல்வி கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை நண்பா. படிப்பின் இடையில் பதிவுகளையும் கவனிக்கலாமே !!
12:45 AMஉண்மை... உண்மை. நன்றி... நன்றி
2:52 AMகருத்துரையிடுக