India

Uganda

United Kingdom

Malaysia

31. Manchester கதைகள்...

சனி, ஜூன் 07, 2008

முந்தா நேத்து எங்க லேப்ல இருந்த ஸ்பெக்ட்ரோ சரியா வேலை செய்யலேன்னு பக்கத்து லேபுக்கு போயிருந்தேன். வழக்கம் போல பேனாவை எடுத்துட்டுப் போகலை. சரீன்னு அங்க இருந்த ஒரு பேனாவை எடுத்து எழுத ஆரம்பிச்சேன். கொஞ்ச நேரத்துல கை வழக்கம் போல பேனாவை வாய்க்கு எடுத்துட்டு போச்சு. அப்பத்தான் பேனா முனையில ஏதோ எழுதி இருந்ததைக் கவனிச்சேன். உத்துக் கவனிச்சு எழுத்துக் கூட்டிப் படிச்சா....

"Don't chew... Cyanide dipped..." ன்னு ஏதோ மெக்டொனால்ட்ல ஸ்வீட் சில்லி ஸாஸ்ல டிப் பண்ணின மாதிரி எழுதி இருந்தானுங்க. அடப்பாவிங்களா, பேனாவை வாயில வைக்கிறது ஒரு குத்தமாடா? அதுக்குப் போய் மரண தண்டனையாடா தருவீங்கன்னு பயந்துபோய் ஓடி வந்துட்டேன்.

இதை நினைக்கிறப்ப கார்ன்வால் போயிருந்தப்ப ஒரு உணவுவிடுதிக்கு வெளில இருந்த அறிவிப்புப் பலகைதான் ஞாபகத்துக்கு வருது. அது விளையாட்டுக்கு எழுதினதா, ஸீரியசா எழுதினதான்னு தெரியலை.

"Unattended children will be sold as slaves". அடங்கொக்காமக்க... காவாலிப்பய ஊரால்ல இருக்குன்னு நொந்துக்கிட்டேன்.

இருந்தாலும் நேற்று நடந்தது கொஞ்சம் ஓவரான ஜோக்குதான். இங்க பல்கலைக்கழகத்துல ஒவ்வொரு வருடம் முடிக்கும் போதும் ஒரு workshop நடத்துவாங்க. இந்த வருடம் எங்களுக்கு Communication skills பற்றி நடந்தது. சன் பத்திரிக்கையில் அறிவியல் பக்கத்தை எடிட் பண்றவரு வந்திருந்தாரு. அதில ஒரு போட்டியும் நடத்தினாங்க. அதாவது அவர் ஒரு அறிவியலாளர் மாதிரி பத்திரிக்கையாளர் கூட்டம் நடத்துவாரு, அதைப்பற்றி நாங்க 150 வார்த்தைகள்ல ஒரு ரிப்போர்ட் தயாரிக்கனும். மாணவர்கள் பத்து குழுக்களாகப் பிரிக்கப் பட்டிருந்தோம். அரைமணி நேரத்திற்குப் பிறகு எல்லோருடையதையும் ப்ரொஜெக்டரில் போட்டுக் காட்டினாங்க. தலைப்பு ரொம்ப கவனத்தை ஈர்க்கும் படியா இருக்கனும்னு எல்லோருமே முயற்சி பண்ணியிருந்தது நல்லா தெரிஞ்சது. அதுல ஒரு குழு எழுத ஆசைப்பட்ட தலைப்பு இதுதான். "கொலைகார எலிகளால் பொதுமக்களுக்கு ஆபத்து". ஆனா தெரிஞ்சு பண்ணினாங்களா இல்ல தெரியாம நடந்திருச்சான்னு தெரியலை, எழுதும்போது ஒரு "L" ஐ விட்டுட்டு அவங்க எழுதியிருந்தது இதுதான்.

"Killer Rates Endanger Pubic Safety"

நீங்களே சொல்லுங்க் இதெல்லாம் தெரியாம பண்ணியிருப்பாங்களா, இல்ல ரூம் போட்டு யோசிச்சுப் பண்ணியிருப்பாங்களா?

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தல, எதேர்ச்சையா, உங்க வலையில் வந்து மாட்டுனேன்... எல்லா பதிவும் படிச்சுட்டேன். செம சுவாரஸ்யம். சலிக்காத, அலுக்காத நடை. அருமையான floating இருக்கு பாஸ். தொடர்ந்து கலக்குங்க..! உகாண்டால நீங்க வெள்ளைக்காரரு, இங்க..?

1:27 AM
Costal Demon சொன்னது…

வாங்க பிரகாஷ்,

வாழ்த்துக்கு நன்றி...(என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலியே...;‍))

//உகாண்டால நீங்க வெள்ளைக்காரரு, இங்க..?//

பண்ணீட்டீங்களே காமெடியை...

10:19 AM