நம்மளையும் ஒரு மனுசனா மதிச்சு, நாலு சங்கிலில சேர்த்து விட்டிருக்குற நம்ம இதயக்கனி, பாசத்த்லைவர், அன்பு அண்ணன் மணியன் அவர்களுக்கு, கம்பாலா பாம்போ ரோட்டின் நடுவில் சிலை வைக்க போராட்டம் நடத்த ஏற்பாடு செய்தாகி விட்டது. :-)
இனி நம்ம நாலுகள்...
1. பிடித்த நாலு உணவு வகைகள்:
சொல்ல நினைப்பது:
1. கம்மஞ் சோறும், கருவாட்டுக் குழம்பும்
2. பழைய சோறும், சின்ன வெங்காயமும்
3. புரோட்டாவும், காரமான சால்னாவும்
4. அம்மா கைவண்ணத்தில் மல்லிகைப்பூ இட்லியும், தொட்டுக்கப் பொடியும்
சொல்வது:
1. பீட்சா
2. பர்கர்
3. நக்கெட்ஸ்
4. சிக்கன் சிப்ஸ் (என்னன்னே தெரியல, இதெல்லாம் சாப்பிடலேன்னா தூக்கமே வர மாட்டேங்குது)
2. போயிருக்கும் நாலு வெளி நாடுகள் (அட்ரா சக்கை..அட்ரா சக்கை)
சொல்ல நினைப்பது:
1. மலேசியா
2. சிங்கப்பூர்
3. உகாண்டா
4. கென்யா (அடங்குடா...அடங்குடா...)
சொல்வது(எதிரேயிருப்பவர் நான் எது சொன்னாலும் நம்புபவராக இருந்தால்...)
1. சுவிஸ்
2. கனடா
3. யு.கே
4. கியூபா
3. பிடித்த நாலு நடிகைகள் (யாருப்பா அது, நடிகர்களைப் பத்தி கேக்குறது... அவங்கல்லாம் யாருன்னே தெரியாது எனக்கு...)
சொல்ல நினைப்பது:
1. ஜோதிலட்சுமி
2. ஜெயமாலினி
3. சிலுக்கு சுமிதா
4. டிஸ்கோ சாந்தி (இந்த மாதிரி குல விளக்குகள்லாம் இப்ப பிரபலம் ஆகிறதில்லையே ஏன்???)
சொல்வது:
கொஞ்சம் விவரமான ஆளாக இருந்தால்:
1. சாவித்திரி
2. ரேவதி
3. லட்சுமி
4. ராதிகா
கொஞ்சம் அப்பாவியா தெரிஞ்சார்னா..
1. ஜூலியா ராபர்ட்ஸ்
2. ஆஷ்லி ஜூட்
3. காமரூன் டையாஸ்
4. ரென்னி ரஸ்ஸோ
4. பிடித்த நாலு விளம்பரங்கள்
1. ஹட்ச் சின்னப் பையனும் நாய்க்குட்டியும்
2. சாப்பிட்டுக்கிட்டு இருக்குறவங்க மேல தண்ணி ஊத்தர மாதிரி வரும் கண்ணாடி விளம்பரம்
3. உட்வர்ட்ஸ் கிரைப் வாட்டர்
4. அக்சய்குமார் வந்த தம்ஸ் அப் விளம்பரம்
அனேகமாக எல்லோருமே ஆடி முடித்து விட்ட ஒரு விளையாட்டாகத் தோன்றுவதால் இவ்விளையாட்டின் முடிவைத் தொடங்கி வைக்க விரும்புகிறேன். நன்றி.
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
8 கருத்துகள்:
நல்லாத்தான் சொல்லியிருக்குறீரு:-))))
9:46 AMஇதையெல்லாம் நம்புனது,
எதிரில் இருக்கும் 'அப்பாவி'
துளசி.
கூட்டாளி ரம்ஸ் OOPS ராம்ஸ்,
3:34 AMசில விஷயத்தில் நம்ம டேஸ்ட் கூட ஒத்துபோற மாதிரி இருக்கு
//1. கம்மஞ் சோறும், கருவாட்டுக் குழம்பும்
2. பழைய சோறும், சின்ன வெங்காயமும்
3. புரோட்டாவும், காரமான சால்னாவும்
//3. சிலுக்கு சுமிதா
//1. சுவிஸ்
// டிஸ்கோ சாந்தி (இந்த மாதிரி குல விளக்குகள்லாம் இப்ப பிரபலம் ஆகிறதில்லையே ஏன்???)
ஆமாம் இது என்ன சின்னபுள்ள தனமா கேள்வி.. எதுக்குன்னு உங்களுக்கு தெரியாதா என்ன
Ramu.. unadhu tamil varigal ellam padikka padikka nalla aarvamaga irukkuppaa.. thodarnthu ezhuthavum..mukkiyam konjam nalla pugaipadama paarthu anuppavum sariya..
12:55 AMவாங்க (அப்பாவி !!!) மேடம்,
1:48 PMவருகைக்கு நன்றி.
அன்புடன்,
இராம்ஸ்
//ஆமாம் இது என்ன சின்னபுள்ள தனமா கேள்வி.. எதுக்குன்னு உங்களுக்கு தெரியாதா என்ன?//
1:54 PMவந்துட்டாங்கையா, வந்துட்டாங்கையா... கார்த்திக், நீங்க அந்த விவரமான ஆள்ல ஒருத்தர்னு நினைக்கிறேன். அந்தக் கேள்வி அப்பாவிகளுக்கு மட்டும்தான். ஹி.. ஹி..
வா ராசா,
1:55 PMவலைப்பூ உலகிற்கு வரவேற்கிறேன். தமிழ்ல எழுது நண்பா...
அன்புடன்,
இராம்ஸ்
ராமு....இங்க பாருமா ..யான் தமிழில் எழுதியிருக்கிறேன். .உனக்கு பிடிக்கும் என...உன் வலைப் பகுதியில் தமிழ் மணக்க வாழ்த்துகிறேன். .அன்புடன் ராசா..
8:42 PMராம்ஸ், கைகாட்டிவிட்டு தாமதமாக வந்துள்ளேன் :( மன்னிக்கவும். நல்லாவே சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் நடையும் அனுபவங்களும் என்னைக் கவர்ந்ததாலேயே உங்களைச் சுட்டினேன். எனக்கெதற்கு சிலை எல்லாம்,அந்த செலவை பணமுடிப்பாகவே டாலரில் கொடுத்து விடுங்கள் :)))
8:24 PMகருத்துரையிடுக