13. போடா...போடா...
செவ்வாய், ஜனவரி 31, 2006
உகாண்டவைப் பற்றிச் சொல்லும் போது, அவர்களின் தனித்துவமான போக்குவரத்து சாதனத்தைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. நம்மூரில் ஆட்டோக்கள் மாதிரி இவை இங்கே பயன்படுத்தப்படுகின்றன. பெயர்: போடா போடா, பெயரைக் கேட்டால் திட்டுகிறானே என்று பார்க்காதீர்கள். பெயரே அதுதான். Boda..Boda...
உகாண்டாவில், அரசுக்கென்று சொந்தமாக பேரூந்துக் கழகமோ, விமானக் கம்பெனியோ கிடையாது...முன்னாடி இருந்ததாமாம். யார் கண் பட்டதோ தெரியவில்லை இப்போது இரயில் கூட மக்கள் போக்குவரத்துக்கு இல்லை.. பின்னே இவர்கள் எப்படித்தான் பயணிக்கிறார்கள் என்கிறீர்களா..? சில தனியார் பஸ்கள் ஓடுகின்றன.மற்றபடிக்கு நம்மூர் மினி வேன் சர்வீஸ்தான். கஷ்டம் என்னவென்றால், நேரத்திற்கு எடுக்க மாட்டார்கள்..வேன் எப்போது நிரம்புகிறதோ அப்போதுதான்.. உங்களுக்கு அன்றைய தினம் உட்டாலக்கடி சாமியாரின் அருளாசி இருந்தால் அரை மணி நேரத்திலோ, முக்கால் மணி நேரத்திலோ வேன் நிரம்பிவிடும்..அதுவும் 16 லிருந்து 20 பேர் வரை ஏற்றாமல் விட மாட்டார்கள். இல்லையென்றால் 2 மணி நேரம் ஆனாலும், வேன் அந்த ஊரையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும். என் ரெக்கார்டு 12 முறை.. அதாகப் பட்டது, போவது போல் கிளம்பி ஊர் எல்லை வரை சென்று, திரும்பி வந்து விடுவார்கள். கற்பனை செய்து பாருங்கள், 12 முறை...
ஆக 100 கி.மீ தூரம் செல்ல நான்கு மணி நேரம். மற்ற படிக்கு, வேன்கள் எல்லாமே ஏதோ ஒரு மத்திய கிழக்கு அல்லது தூரகிழக்கு நாட்டில், நன்றாக அடி பட்டு, வாழ்க்கையின் கடைசிக் காலத்தை உகாண்டாவில் கழித்துக் கொண்டிருக்கும்.. அந்த வேனில் மணிக்கு 130 கி.மீ வேகம் வரை செல்லும் இவர்களின் கடமையுணர்ச்சி சில சமயம் புல்லரிக்கச் செய்யும்.. சில இடங்களில் கார்கள் பயன்படுத்தப் படுகின்றன..டிரைவரையும் சேர்த்து 7 பேர்..
இவையெல்லாம் வெளியூர் பிரயாணத்திற்கு..உள்ளூரில்..?? அதற்குத்தான் போடா போடா.. நம்மூர் ஆட்டோவை விட சீப்..ஆனால் ஒரு நேரத்தில் ஒருத்தர்தான் பயணிக்க முடியும். மழை, வெயில் எல்லாம் பார்க்கக்கூடாது. குஷன் சீட்டெல்லாம் உண்டு..இவர்கள் ஸ்ட்ரைக் செய்தால் அனேகமாக மொத்த உகாண்டாவுமே ஸ்தம்பித்துவிடும்.. இத்தகைய பெருமை கொண்ட போடா போடா விற்கு, நம்மூரில் நாம் வைத்திருக்கும் பெயர்...
மிதி வண்டி...அதாவது தூய தமிழில், சைக்கிள்...
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துகள்:
ராம்ஸ்,
12:29 PMநான் எகிப்து சென்றிருந்தபோதும் இதே மாதிரிதான். ஒரு நிமிட பயணமானாலும், ஐந்து மணி நேரப் பயமென்றாலும் ஒரு EGP தான். பொது போக்குவரத்தை கயிரோவில் மட்டுமே பார்த்தேன். ஆப்ரிக்காவின் முதல் மெட்ரோ என்று சொன்னார்கள்.
ஆனாலும் Boda..Boda...
கொஞ்சம் டூ மச் தான்! கன்வெர்ஷன் ரேட் என்னவென்றும் சொல்லியிருக்கல்லாம்.
இரயில் கூட இல்லா நிலையில் தனியார் கார்கள் வைத்துக்கொள்வது எவ்வளவு சாத்தியம்? பெட்ரோல் விலையென்ன என்று மேலும் எழுதுவீர்களென்ற நம்பிக்கையில்..
அன்புடன்,
இராமநாதன்
இந்தப் புகைப்படம் உகாண்டாவில் எடுக்கப்பட்டதா? நல்ல வளமான நாடு போலத் தெரிகிறதே?
5:41 AMஇயற்கையிலேயே வளமான நாடுதான்.. சுதந்திரத்தை லேட்டா வாங்கினதாலே அவஸ்தைப் படறாங்க.
6:24 AMவருகைக்கு நன்றி,
இராம்
ராம்ஸ்,
6:42 AMசாதாரணமா எவ்வளவு காசு சவாரிக்கு கொடுக்கணும். மீட்டருக்கு மேல ஏதாவது உண்டா :-)?
சாதாரணமக நம்மூரில் ஆட்டோவில் இருபது ரூபாய் கேட்டால் இங்கே இருநூறு முதல் நானூறு சில்லிங் வரை கேட்பார்கள். நூறு சில்லிங் என்பது கிட்டத்தட்ட இரண்டு ரூபாய் ஐம்பது காசுகள்.
5:22 AMகருத்துரையிடுக