India

Uganda

United Kingdom

Malaysia

14. நதியா.. நதியா.. நைல் நதியா..??

செவ்வாய், பிப்ரவரி 07, 2006

உலகின் மிக நீளமான நதி, எகிப்த்தின் கொடை என்றெல்லாம் வர்ணிக்கப்படும் நைல் நதியின் பிறப்பிடம் (வெள்ளை நைல்) சாட்சாத், தற்சமயம் அடியேன் குடி கொண்டிருக்கும் இந்தப் புண்ணிய பூமிதான். முதன் முதலாக நைலைப் பார்த்த போது ஏற்பட்ட பிரமிப்பு, முதன்முதலாக காவிரியைப் பார்த்த போது ஏற்பட்ட பிரமிப்பிற்கு சற்றும் குறையாதது.

கென்யா, தான்சானியா மற்றும் உகாண்டா எனப் பரந்து விரிந்திருக்கும், விக்டோரியா ஏரிதான் நைலின் மூலம். புசியா-விலிருந்து பார்க்கும் போது, மிகவும் அமைதியாக காணப்படும், இந்த ஏரிதான் நைலின் ஊற்று என்று நம்புவதற்கு சற்று கடினமாக இருந்தாலும், (கைக்கெட்டும் தூரத்தில் கென்யாவைப் பார்க்கலாம்) என்ட்டபி பக்கத்திலும், முன்யோன்யோவிலும் இருப்பது இதே விக்டோரியா ஏரிதான் என்று அறியும் போது இவ்வளவு பெரியதா என்று வியப்பேற்படுவதைத் தடுக்க முடியவில்லை.

இங்கே வந்த புதிதில், அருகிலிருக்கும், Mount Elgon க்கு சென்ற போது, மலை அவ்வளவாகப் பிரமிப்பேற்படுத்தவில்லை. நம் ஊட்டி, கொடைக்கானல் அளவு கூடக் கிடையாது. குளிரும் அவ்வளவாக இல்லை. மாறாக, பிரமிப்பு ஏற்படுத்தியது, அங்கிருந்த அருவிகள்தான். Sipi Falls மட்டுமே இருக்குமென நம்பிச் சென்ற நான், அங்கு பார்த்தது, கிட்டத்தட்ட 20 அருவிகள். தொடர் மழை காரணமாக ஏற்பட்டிருந்த அந்த அருவிகளை, அந்தப் பசுமையான பின்னனியில் பார்த்த போது, சொர்க்கம் என்பது, அருகில்தான் எங்கோ இருப்பது போன்ற உணர்வேற்பட்டது.

உண்மையிலேயே தண்ணியில்லாக் காடான கோவில்பட்டியில் பிறந்து வளர்ந்த நான் இப்படியாக நாடு முழுவதும் இவ்வளவு தண்ணீரைப் பார்த்தவுடன் அடைந்த மகிழ்சிக்கு அளவே கிடையாது. சரி,அதுக்கு இப்போ என்ன வந்துச்சி என்கிறீர்களா..?

காரணம் இருக்கிறது... நேற்றைய செய்தித் தாளில் வந்திருக்கும் செய்தி... தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, போதிய அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாததால், திங்கள் முதல் (சரியாகக் கவனிக்கவும் திங்கள் மட்டுமல்ல, திங்கள் முதல்), உகாண்டா முழுவதும், காலை ஆறு மணி முதல், மாலை ஆறு மணி வரைக்கும் மின்சாரம் துண்டிக்கப் படும். எத்தனை நாளுக்கு இது தொடரும் என்பதைப் பற்றிச் சரியான தகவல் இல்லை...

உலகின் மிக நீளமான நதி.... உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஏரி... மழைக்காலத்தில் இருபது அருவிகள் உற்பத்தியாகும் எல்கான் மலை... எல்லாவற்றையும் மீறி லேசாக நரக வாடை அடிப்பது போல் தோன்றுகிறது...

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நானும் ஏதோ நதியா பற்றி சொல்றீங்க என்று நினைத்தேன் :-)
ஆனாலும் பல விடயம் அறிந்து கொண்டேன்

நன்றி
நேசமுடன்
-நித்தியா

7:30 AM
Costal Demon சொன்னது…

Thanks Nithya, Thanks Alex.

8:55 PM
NONO சொன்னது…

//உலகின் மிக நீளமான நதி..
//
அமசோன் நதியா நைல் நதியா நீளமானது என்று சர்சை இன்னமும் உன்டு!! இந்த சர்சையை தீர்து வைத்ததாய் நான் அறியவில்லை...!!!
நைல்ததியின் ஆரம்பம்தான் இந்த சர்சைக்கு காரனம்!!!
கீவு(KIVU) ஏரிப்பக்கம் போகலையா, இந்த ஏரி சைரே (தற்போதைய கொங்கோ) உகாண்டா எல்லையில் உள்ளது!! இது ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் எரிமலை குளம்புகளால் தோன்றியது. நான் போகவேண்டிய இடங்கள் பட்டியிலபில் இந்த இடமும் அடக்கம்! போனால் மறக்காமல் எழுதவும்!!!

8:21 AM
Costal Demon சொன்னது…

அந்த சர்ச்சையைப் பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கேன். நான் இங்கே வரும் போது காங்கே பார்டரில் இருக்கும் அரூவாவிற்குதான் அனுப்புகிற மாதிரி இருந்தார்கள். பிற்காலத்தில் போகும் சூழல் வரலாம்..

6:55 AM
பெயரில்லா சொன்னது…

Ram,
I went through ur article. fantastic. u have a touch of humor.continue.
urs
ramachandran

3:10 AM
பெயரில்லா சொன்னது…

this page is very good expression and it same to american writer mark twin traveling stories thank you thiagu

4:04 PM
Sivabalan சொன்னது…

Good Blog!!

If could add some photos, then it would be of great help!!

Please go ahead!!

12:13 AM