நீளமான பேர் வச்சதனாலயோ என்னவோ தெரியல, பதிவ காணவே காணோம். அதுக்குதான் இது.
பிடிக்காத விசயங்களைப் பற்றி எழுவதற்கு எளிதாக இருந்தது.. நல்ல விசயங்களைப் பற்றி எழுத வெகு நேரம் யோசிக்க வேண்டியிருக்கிறது.. என் தவறுதான், ஒப்புக் கொள்கிறேன்...
இங்கு வரும் வரை வணக்கம் சொல்லுதல் என்பதே ஒரு மாதிரியான, தர்ம சங்கடமான காரியமாக இருந்தது. மற்றவர் பதிலுக்கு வணக்கம் சொல்லாமலோ அல்லது கவனிக்காமலோ போய் விட்டால் அசிங்கமாகப் போய் விடுமே என்ற அச்சம்தான் காரணம். என் கல்லூரி நண்பன் (உட்டாலக்கடி சாமியாரின் மீது சத்தியமாக நான் இல்லை, என் நண்பந்தான்...)ஆசிரியர் யாரையேனும் ஒரு கி.மீ சுற்றளவில் எங்கு பார்த்தாலும், தன் உயரத்தில் முக்கால் உயரம் மட்டுமே தெரியுமளவுக்கு ஒரு கூண் போட்டு, கையை விசுக்கென்று நெஞ்சு வரை கொண்டு வந்து, குமர்னிங் சர் (Good morning Sir எனப் பொருள் கொள்க..அது காலை, மதியம், சாயங்காலம், இரவு என எந்த வேளையாக இருந்தாலும் Standard குமர்னிங் சர் தான்)என்று வெளியே சத்தமே கேட்காத மாதிரி ஒரு வணக்கம் சொல்வான்.இதை அந்த ஆசிரியர் பார்த்து விட்டு பதிலுக்கு வணக்கம் சொல்லி விட்டால் தீர்ந்தது மேட்டர்.. ஒரு வேளை அவர் கவனிக்காமல் போய் விட்டால் பிடித்தது வினை. அடுத்து அவர் கவனிக்கும் வரை தொடர்ச்சியாக இந்த வணக்கத்தைப் போட்டுக் கொண்டே இருப்பான். எத்தனை முறையானாலும் விடமாட்டான் அந்த விடாக்கொண்டன்.. இவன் இந்த வினோதமான வணக்கத்தைப் போட்டுக் கொண்டே நடந்து வருவதை, தூரத்திலிருந்து பார்க்கும் போது மிகவும் காமெடியாக இருக்கும்.
இங்கே உகாண்டாவில் இவர்களிடம் இருக்கும் சில நல்ல பழக்கங்களுள் ஒன்று, மனதார வாழ்த்துதல் அல்லது வணக்கம் சொல்லுதல். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 முறையாவது Hai, How are you? அல்லது Hai How is you? என்று சொல்லவும், கேட்கவும் வேண்டியிருக்கிறது. தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர், அறியாதவர், உற்றார், உறவினர், நண்பர், எதிரி என யாரைப் பார்த்தாலும் அதே HHAY or HHIY தான்.பிச்சைக்காரர்கள் கூட குசலம் விசாரித்து விட்டுதான் யாசிக்கிறார்கள். சில சமங்களில் இது கொஞ்சம் ஓவராகவும் போய் விடும். கடையில் வேலை செய்யும் ஆப்பிரிக்கர்களில் சிலர், வாடிக்கையாளர்களிடம் ஃபோனில் பேசும் போது, அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் நலன், ஊர் எப்படி இருக்கிறது, வியாபாரம் எப்படி இருக்கிறது, மழை பெய்ததா போன்ற அதி முக்கியமான கேள்விகளை எல்லாம் கேட்டு விட்டு, பின் எதற்காக ஃபோன் சொய்தோம் என்பதையே மறந்து விட்டு, அப்புறமாக கூப்பிடுகிறேன் என்று சொல்லி வைத்து விடுவார்கள். இதை நிறைய முறை பார்த்திருக்கிறேன்.
அடுத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விசயம், தண்ணீர் கலக்காத பால் மற்றும், செயற்கை உரங்கள் உதவியில்லாமல் விளைந்த காய் கறிகள். வீட்டிற்கு வந்து போட பால்காரர்களெல்லாம் கிடையாது.(ஆச்சர்யமான விசயம், ஒரு சில வீடுகளுக்கு ஒரு வெள்ளைக்காரர் பால் ஊற்றுகிறார்). Platform களில் வாளி நிறைய பாலோடு உட்கார்ந்திருப்பார்கள். ஒரு கப் என்பது அரை லிட்டர். ஒரு லிட்டர் பால் கிட்டத்தட்ட 16 ரூபாய்.காய்கறி விலை அதிகமாக இருந்தாலும், இயற்கையாக விளைந்ததால் சுவையும் சத்தும் அதிகம்.
இன்னொரு குறிப்பிட்டே ஆக வேண்டிய விசயம், பியர் விலை பாட்டில் தண்ணீரின் விலையை விட கொஞ்சம்தான் அதிகம். ஒரு லிட்டர் தண்ணீர் 1000 ஷில்லிங்ஸ். 500 ml பியர் 800 ஷில்லிங்ஸ். ஹி...ஹி..இதுவும் நல்ல விசயந்தானுங்களே...
இவ்வளவு பெரிய தலைப்பைப் போட்டது ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கைக்காகத்தான். கின்னஸ்லே இடம் பிடிக்கிற ஆசையெல்லாம் கிடையாதுங்க ;-)
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
6 கருத்துகள்:
Rams,
10:14 AMYour blogs are informative.Keep writing good things.
Can write Healthcare & Insurance in uganda?
Kovilpatti Balakrishnan
நாம் நல்ல கருத்தை முக்கியமான கருத்தை பல கி.மீ. சென்று சேகரித்த செய்தியை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் நாலுவார்த்தை ஏதோ கிறுக்கி இல்ல இல்ல டைப்பி வைத்தால் அதற்கு பாருங்கள் ஏகப்பட்ட பின்னூட்டங்கள் என்ன செய்வது
10:30 AMவாருங்கள் என்னார்,
6:10 AMவருகைக்கு நன்றி...
அன்புடன்,
இராம்ஸ்
Thanks Bala,
6:11 AMSure, I will do that.
Regards
Rams
தண்ணியும் பியரும் ஒரே விலை, இங்க எப்படி தெரியுமா கோக்கைவிட தண்ணி விலை அதிகம்(கோக் $ 0.60 தண்ணி $1) இதைத்தான் கலி காலம் அப்படின்னு செல்லுவாங்களோ.
7:55 AMசரியாச் சொன்னீங்க சந்தோஷ்.. இது எதுல போய் முடியும்னுதான் தெரியல..
6:15 AMகருத்துரையிடுக