மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இரவில் வெக்கை தணிந்து இதமான குளிர் தெரிகிறது. மின்விசிறிகள் தேவைப்படாத இரவுகள் காத்திருப்பது போல் தோன்றுகிறது. மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியாத நிலையில், இது போன்ற கால நிலை, இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சராசரியாக 36 டிகிரி வெப்பநிலையில் வாழ்ந்து பழகியிருக்கும் எனக்கே இங்கே புழுங்குகிறது என்றால், சராசரியாக 22 முதல் 26 டிகிரியில் வாழ்ந்து பழகியிருக்கும் இம் மக்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. இதில் மலேரியா வேறு.. கொசுக்களுக்கு பயந்து, போர்த்திக் கொள்ளவும் முடியாமலிருந்தது. நல்லவேளை, மழை உதவிக்கு வந்து விட்டது.
மழை என்றால் நம்மூர் போல், பெரியதாக இடி மின்னலுடன், பட படவென்று பெய்து விட்டு, ஒரு மணி நேரத்திலோ, இரண்டு மணி நேரத்திலோ அடங்கி விடக்கூடியதல்ல இந்த ஊர் மழை. பொதுவாக இடி மின்னல் இல்லாமல், நனையத் தூண்டுகிற மிதமான வேகத்தில் தொடர்சியாகப் பெய்து கொண்டிருக்கும், அதுவும், சொல்லி வைத்தாற்போல் தினமும்...சினேகிதமான இந்த மழையில் நனைந்து கொண்டே, காலையில் வாக்கிங் போவது உண்மையிலேயே ஒரு சுகானுபவம். (தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், பாதுகாப்பு காரணமாக, இப்போதெல்லாம் போக முடியவில்லை... இந்தியர்கள் எல்லோருமே பணக்காரர்கள் என்று இவர்கள் நினைப்பதால், தாக்குதலுக்கோ அல்லது கடத்தலுக்கோ உள்ளாக நேரிடலாம்)
இந்த இதமான தட்ப வெப்பநிலை தவிர, இந்தியாவில் எனக்குப் பிடிக்காத விசயங்களக இருந்த, வீட்டை சுத்தம் செய்தல், துணி துவைத்தல், ஷூ பாலீஸ் போடுதல் இவை போக, சமைத்தல், மார்க்கெட்டுக்கு போகுதல் என சகல வேலைகளையும் செய்ய House Girl அல்லது House Boy கிடைப்பது உகாண்டாவில் எனக்கு ரொம்பப் பிடித்த விசயம்.(Servant என்று விளித்தால் இவர்களுக்கு கோபம் வந்துவிடும்... இதைப் போலவே Black என்று அழைத்தால் கூட கோபப்படாத இவர்கள் நீக்ரோ என்று அழைத்தால் மிகவும் கோபப் படுவார்களாம்). எங்கள் House Girl 5 வருடங்களாக தென்னிந்தியர்களிடம் வேலை பார்த்த அனுபவம் இருந்ததால், இட்லி, தோசை முதல் சமோசா, மிக்சர், சேவு வரைக்கும் செய்யத் தெரியும். 90,000 உகாண்டா ஷில்லிங்ஸ் சம்பளம் (கிட்டத்தட்ட 2250 ரூபாய்). Aids ஆல் பாதிக்கப் பட்டிருக்கும் (இதெல்லாம் இங்கே சகஜம்) இவளை நம்பிப் பெரிய குடும்பமே இருப்பது வேதனையான விசயம்.
பயணக் கட்டுரை மாதிரி எழுதி போரடிச்சுட்டேன்னு நினைக்குறேன்... கொஞ்சம் Gap விட்டுக்கிறேன்...
வர்ட்டா,
இராம்ஸ்
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
8 கருத்துகள்:
இன்னுமதிகமாய் எதிர்பார்த்தால், அதுக்குள்ள ஓடுறியள்?
10:02 AMமழையைத்தான் நல்ல விஷயம்னு சொன்னீங்களா?
2:33 PMநல்லா informative and interesting ஆக இருக்கு.
நன்றி'ங்க
interesting and useful news. pls keep writing
12:48 PMchidambaram
வாருங்கள் வசந்தன்..
2:27 AMதமிழில் டைப் செய்ய தாமதமாகுவதாலும், இங்கே மின் தடை அதிகமாக இருப்பதாலும் நிறைய எழுத முடியவில்லை. சந்தோசப் படாதீர்கள். கொடுமைப் படுத்துவதை நிறுத்த மாட்டேன்...
நன்றி தருமி சார்...
2:31 AMஅத்திப் பூத்தாற் போல் மழை பெய்யும் கந்தக பூமியிலிருந்து வந்ததால், மழை என்பதே சந்தோசமான விசயமாகத்தான் இருந்து வந்திருக்கிறது.. இன்னும் நல்ல விசயங்கள் இருக்கின்றன. மின் தடை காரணமாக நிறைய எழுத முடியவில்லை.
Thanks Chidambaram.
2:32 AM/* இட்லி, தோசை முதல் சமோசா, மிக்சர், சேவு வரைக்கும் செய்யத் தெரியும் */
7:51 AMராம் வயித்தெரிச்சலை கிளப்பாதிங்க இத எல்லாம் நாங்க பாக்கெட்டுல பாத்தே பழக்கமாயிடிச்சி. நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சி, நீங்க என்னடான்னா உகாண்டாவுல ஒக்காந்துகிட்டு சமோசா செய்ற வேலைக்காரி பத்தி செல்றீங்க. இதுக்கு மேல சாப்பாட்டை பத்தி எழுதக்கூடாதுன்னு தமிழ்மணத்துல செல்லி தடை போடணும். இது எல்லாம் ரொம்ப ஓவர் செல்லிட்டேன்.:))
வெறும் சமோசா, மிக்சருக்கே இப்படியா...? அப்படின்னா அந்த Stuffed Parotta, அச்சு முறுக்கு, Egg roll ப்த்தில்லாம் எழுத வேண்டாங்கிறீங்களா?
6:28 AMகருத்துரையிடுக