வன்முறை பயத்தில், தேர்தல் சமயத்தில் இங்கிருக்க வேண்டாமென்று, நிறைய இந்தியர்கள் இங்கிருந்து இந்தியாவிற்கோ, அல்லது பக்கத்திலிருக்கும் கென்யாவிற்கோ குடும்பத்தை அனுப்பி விட்டனர். இவர்கள் கொடுத்த பில்ட் அப்பில் நான் கூட தேர்தல் சமயத்தில் வன்முறை ஏதேனும் நிகழக்கூடும் என்ற பயத்தில் ஒரு வாரத்திற்குத் தேவையான பொருட்களை ஸ்டாக் செய்து வைத்திருந்தேன். எந்த அசம்பாவிதமும் இல்லாமல், அமைதியாக தேர்தல் முடிந்து, முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. எதிர்பார்த்தது போலவே, தற்போதய ஜனாதிபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டிருக்கிறார். எதிர்பார்த்தது போலவே, எதிர்கட்சித் தலைவர், தேர்தல் முறைகேடுகளைப் பற்றி குற்றம் சாட்டியிருக்கிறார். எப்படியானாலும், முசே வெற்றி பெறுவார் என்ற ஆப்பிரிக்கர்களின் வதந்தி உண்மையாகியிருக்கிறது. வன்முறை நடந்து, ஊரே இரத்தக்காடாகப் போகிறது என்ற வதந்தியைப் பரப்பி விட்டு, குடும்பத்தோடு வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்கள், தேவையில்லாமல் ஏர்லைன்ஸ் காரர்களுக்கு மொய் எழுதி விட்டார்களோ எனத் தோன்றுகிறது.
National Resistance Movement (NRM) கொண்டாட்டங்களைத் தொடங்கி விட்டது. அதே செடி கொடி உடை தரித்த மக்கள், அதே மத்தளச் சத்தம், அதே ஆட்டம்... திங்கட்கிழமை இந்த கொண்டாட்ட மூடிலிருந்து விடுபட்டு, தண்ணீர், மின்சாரம், அன்றைய இரவு பியர் போன்ற அத்யாவசிய பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படத் தொடங்கி விடுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. வன்முறை அது இதுவென்று கடந்த பல மாதங்களாக பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த தேர்தல் சப்பென்று முடிந்து விட்டற் போன்று தோன்றினாலும், வன்முறை ஏதுமின்றி நடந்து முடிந்திருப்பது, நிம்மதியளிக்கிறது.
அடுத்த பதிவில்...
நமக்கெல்லாம் தாடி வைத்தால், அரிக்குமல்லவா.. அதே போல் இவர்களுக்குத் தலையில் முடி வைத்தால் அரிக்கும்... மற்றும் இந்த ஊர் பெண்களின் வினோத தலையலங்காரப் பழக்கங்கள் பற்றி...
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
11 கருத்துகள்:
ராம்ஸ்,
8:34 AMஇந்தத் தேர்தல்ல born again கிறிஸ்துவ பாதிரியார்களின் பங்கு அதிகம் இருந்ததுன்னும், மூசேவெனியும் அவர் மனைவியும் கடவுளின் ஆணையால் தேர்தலில் நிற்கிறார்கள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டதாய் செய்தி படித்தேன். அது உண்மையா?
நம்ம எத்த ஒட்டு போட்டோம்ணு கணக்கே வரலை. [நல்ல / கள்ள ஒட்டு எல்லாம் சேத்து]
8:48 AMjust kiddinng :-)
உங்க உகாண்டா அனுபவங்கள் ரொம்ப சுவாரசியமா இருக்கு. ஆனா எப்படி தைரியமா அங்க இருக்கீங்கன்னு தான தெரியல.
11:43 AMவாங்க இராம்ஸ்,
5:00 PMஎல்லாக் கூத்தும் அறங்கேறியது. பெரிய Impact இருந்ததாகத் தெரியவில்லை. உண்மையை சொல்லப்போனால், பெஸிஜ்யே விற்கு கூடிய கூட்டத்தில் பாதி கூட முசேவிற்கு கூடவில்லை. Mbale மட்டுமல்ல, Kampala, Mbarara, Jinja என எல்லா இடத்திலும் இப்படித்தான் என கேள்விப்பட்டேன். முசேயால் கைது செய்யப்பட்டவர் என்பதால் அவரைப் பார்க்க கூட்டம் கூடுவதாக சப்பை காரணமும் கூறப் பட்டது. முசே நம்ம MGR மாதிரி, கிராமப்புறங்களில் நல்ல செல்வாக்கு, அல்லது அப்படி நம்ப வைத்திருக்கிறார்கள்.
வாங்க கார்த்திக்,
5:03 PMஇப்பத்தான் தேர்தல் பிரச்சினையில்லாம முடிஞ்சிருக்கேன்னு, சந்தோசப்பட்டேன். ரவுண்டு கட்டி அடிவாங்க வைக்காம விட மாட்டீங்க போலிருக்கே.. :-)
என்னை வீரத்தின் விளைநிலம், அஞ்சாநெஞ்சன், தைரியச்செம்மல் என்றெல்லம் பாராட்டிய அண்ணண் வெங்கட்ரமணிக்கு எல்லோரும் ஜே போடுங்க... :-))
5:14 PMவருகைக்கு நன்றி சார்.
இராம்ஸ்,
6:43 PMஇன்னிக்குதான் House Girl சொன்னாள்.Born Again Christians Prayer செய்ததால்தான் முசே பெற்றாராம். அது தவிர பெசிஜ்யே பெண்கள் வேலைக்குப் போவது பற்றியும், சில பிற்போக்குத்தனமான கருத்துக்களைச் சொன்னாராம். அதனால் தாய்மார்களின் ஓட்டுகள் கிடைக்கவில்லையென்றும் சொன்னாள்.
ராம்ஸ் அருமையான பதிவு. ஆப்பிரிக்காவின் நிலை உலகத்திற்கு அதிகம் வெளிவருவதில்லை. வருகிற சில செய்திகள் கூட பிரச்சனைகள் பற்றியதாக மட்டுமே. உங்களது பதிவுகள் உகாண்டா பற்றி விரிவாக தெரியவைக்கிறது. தொடருங்கள் நண்பரே!
7:31 AMவாங்க திரு,
11:21 AMவருகைக்கும், கருத்துக்கும், நன்றி.
அன்புடன்,
இராம்ஸ்
உகாண்டாவில் தேர்தல்! பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
7:46 PMவாங்க துபாய்வாசி,
3:59 AMவருகைக்கும், கருத்துக்கும் நன்றி
அன்புடன்,
இராம்ஸ்
கருத்துரையிடுக