India

Uganda

United Kingdom

Malaysia

29.உகாண்டா போய் இங்கிலாந்து வந்தது டும் டும் டும்....

ஞாயிறு, நவம்பர் 04, 2007

நான் திரும்ப எழுதும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மிரட்டிய கோடிக்கணக்கான வாசகர்களுடைய வேண்டுகோளுக்கிணங்கி இன்று முதல் திரும்ப எழுத ஆரம்பித்திருக்கிறேன்...(கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டேனோ...!)போன தடவை பிளேடைப் போட்டப்ப உகாண்டால இருந்தேன்... கொஞ்சம் மொக்கையா இருந்தாலும் பரவாயில்லை, பையன் உகாண்டாவைப் பத்தி எழுதுறானேன்னு எக்கச்சக்கமான பேர் (சரியா நாலு பேர்! அதுல ரெண்டு பேர் வழி தெரியாம உள்ளே வந்து மாட்டின‌வங்க...!) என்னோட பதிவு பக்கமா வந்துக்கிட்டு...