India

Uganda

United Kingdom

Malaysia

15. நைல் நதி நாடு..

திங்கள், பிப்ரவரி 13, 2006

அதிகாலை 3.30 க்கு பலத்த துப்பாக்கி சத்தம் காரணமாக முழிப்பு வந்து விட்டது. உகாண்டவில் இது ஒன்றும் புதிதல்ல. முதன்முதலில் இங்கே வந்த போது, அலுவலகத்தில் கொடுத்த முதல் அறிவுரையே, பாதுகாப்பு பற்றியதுதான்.. தனியே எங்கும் செல்ல வேண்டாம், துப்பாக்கிச் சண்டை நடந்தால் உடனடியாக தரையில் குப்பறடிக்க படுத்துக் கொள்ளுங்கள் (ஏன் மல்லாக்க படுக்கக்கூடாது என்று அவர்கள் விளக்க வில்லை), தனியாகவோ, அல்லது சிறு குழுவாகவோ செல்லும் போது, யாரேனும் தாக்கினால் (பணத்திற்காக மட்டுமே இது போன்ற தாக்குதல்கள் நடைபெறும்) அடுத்த அடி விழுவதற்கு முன் புத்திசாலித்தனமாக, கையிலிருக்கும் பணம், நகை, மொபைல் போன் ஆகியவற்றை தாரை வார்த்து விடுதல் நல்லது, எங்கே சென்றாலும் கொஞ்சம் பணம் எடுத்துச் செல்லுங்கள் (இல்லையென்றால் பணம் கிடைக்காத சோகத்தில் அல்லது கோபத்தில், நீங்கள் கொலை செய்யப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், குறைந்த பட்சம் ஊமைக்காயங்களுடன் அடி உத்தரவாதம்)

இங்கே வந்தது முதலே, களவு பற்றி அதிகமாக கேள்விப்படுகிறேன். விதம் விதமாக திருடுகிறார்கள்.வங்கிக் கொள்ளை அல்லது பல மில்லியன் பெருமானமுள்ள கண்டெய்னர் கடத்தல், யாரையேனும் கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுதல் போன்ற பெரிய லெவல் திருட்டுகள் போக, காரில் போகும் போது வழி மறிப்பு, இரவில் வீடு புகுந்து கொள்ளையடித்தல் போன்ற நடுத்தர வகை திருட்டுகள், தனியே செல்லும் போது தாக்குதல், வேலை செய்யுமிடத்தில் திருடுதல் போன்ற சின்ன லெவல் திருட்டுகள் (பெரும்பாலும் இவர்கள்தான் மாட்டுவார்கள்) என எந்த வகை திருட்டையும் விட்டு வைக்காத கடின உழைப்பாளிகள் இங்கே அதிகம்.

காலையில்தான் தெரிந்தது, அதிகாலை துப்பாக்கிச் சத்தத்திற்கான காரணம்.. உகாண்டா டெலிகாம் லிமிட்டெட் அலுவலகத்தைக் கொள்ளையடித்து, நிறைய ஃபோன்களைத் திருடியிருக்கிறார்கள். கொடுமை என்னவென்றால், அந்த இடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில்தான் காவல் நிலையம் இருக்கிறது..

இப்படியெல்லாம் விதம் விதமாகத் திருடி, உருப்படியாக ஏதேனும் செய்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை. நாடு முழுக்க பார்களில் கூட்டம் அலை மோதுகிறது, பல மனைவி அல்லது பல கணவர்களுடன் இருப்பது சகஜமான ஒன்றாக இருக்கிறது.. (இரண்டு நாட்களுக்கு முன்னால், கடையில் வேலை செய்பவர்களில் ஒருவன், இறுதி ஊர்வலத்திற்கு செல்ல வேண்டும் என விடுப்பு கேட்டான். யார் மரித்தது என்றேன். அம்மாவின் கணவர் என பதில் வந்தது). இவர்களின் பாலியல் கலாச்சாரத்தைப் பற்றித் தனிப் பதிவே போடலாம்.

மாலையில்,தேர்தல் பிரச்சார ஊர்வலத்தில், இவர்கள் கையில் செருப்பும், துடைப்பமுமாக ஆடிக்கொண்டு சென்றதைப் பார்க்கும் போது (இன்னும் சிலர் செடி கொடிகளை உடை முழுக்க செருகியிருந்தார்கள்) உகாண்டா காலச் சக்கரத்தில் பின்னோக்கிப் பயணிப்பது போல் தோன்றுகிறது.

இன்று இரவாவது, துப்பாக்கிச் சத்தமில்லாமல் நிம்மதியாகத் தூங்கலாம் என்றால் இன்று இரவு முழுக்க மின்சாரம் இருக்காது என்ற நல்ல செய்தி இப்போதுதான் கிடைத்தது. நரகத்தில் சந்தோசமாக வாழ்வது எப்படி என்ற புத்தகத்திற்கு ஆர்டர் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்..(உகாண்டாவில் நல்ல விசயங்களே கிடையாதா என்பவர்களுக்காக அடுத்த பதிவில் சில நல்ல விசயங்களோடு வருகிறேன்)

21 கருத்துகள்:

Muthu சொன்னது…

புதிய விதயங்கள். தகவல்களுக்கு நன்றி.

5:10 AM
Costal Demon சொன்னது…

நன்றி முத்து சார்..

5:15 AM
Costal Demon சொன்னது…

நன்றிக்கு நன்றி முத்து சார்..

5:15 AM
rv சொன்னது…

ராம்ஸ்,
பத்திரமா இருங்க. வேறென்ன சொல்றது. Constant Gardener பார்த்தே ஒரு மாதிரி ஆகிடுச்சு. :(

5:50 AM
பெயரில்லா சொன்னது…

Rams,
I am also from Kovilpatti. Which school you studied?
One of class mate is working in near by Eriteria..

Take Care.

6:48 AM
பெயரில்லா சொன்னது…

Rams,
I am also from Kovilpatti. Which school you studied?
One of class mate is working in near by Eriteria..

Take Care.

6:48 AM
NONO சொன்னது…

நீங்கள் எதோ எகிப்தை பற்றி எழுதுகிறீர்கள் என நினைத்தேன்!!! பிறகுதான் உறைத்தது வெள்ளை நைல்நதியின் ஆரம்பம் உகாண்டாவின் எல்லையில் ஆரம்பித்து உகாண்டாவுக்குள் வடக்கே ஊடுருவிப்பாயுது என்று!!!!

7:45 AM
Pavals சொன்னது…

முதல் தடவை உங்க பக்கம் வர்றேன்.. வந்த்துமே.. உகாண்டா'வ பயங்கிறமா காட்டியிருக்கரீங்க.. இருந்தாலும் அடுத்த பதிவுல நல்ல விதமா சொல்றேன்னு சொல்லியிருக்கீங்க.. அதுனால சந்தோஷம்..
அப்புறம்.. எப்படியாவது ஏன் துப்பாக்கி சண்டை நடந்தா குப்புற படுக்க சொல்றாங்கன்னு கேட்டு சொல்லுங்க.

11:05 PM
Costal Demon சொன்னது…

நன்றி இராம்ஸ்.. Constant Gardener பத்தி உபரித் தகவல் வேற குடுத்திருக்கீங்க.. ரொம்ப நன்றி

6:32 AM
Costal Demon சொன்னது…

வாங்க சார்...

நான் படிச்சது, Nadar School நீங்க ??? நம்மூர்காரரை சந்திச்சது சந்தோசமா இருக்கு...

6:35 AM
Costal Demon சொன்னது…

நன்றி ஒளியினிலே...

எனக்கும் இங்கே வர்றது வரைக்கும் நைல் இங்கேதான் உற்பத்தியாகுதுன்னு தெரியாது... எகிப்துன்னுதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

6:38 AM
Costal Demon சொன்னது…

வாங்க ராசா,

நான் கோயமுத்தூர்ல 3 வருசம் வேல பார்த்திருக்கேன். அப்ப பொள்ளாச்சியும் பண்ணியிருக்கேன்.. அந்த கொங்கு பாசை கேட்டு ரொம்ப நாளாயிருச்சேன்னு வருத்தத்தில இருந்தப்பதான் உங்க தளத்தைப் பார்த்தேன்.. நல்லா எழுதுறீங்க.. உண்மைய சொல்லுங்க.. ஏன் குப்பற படுக்கச் சொல்றாங்கன்னு உங்களுக்குத் தெரியாது...??

6:46 AM
Santhosh சொன்னது…

நல்ல பதிவு ராம் உகாண்டாவின் நாகரிகம், வாழ்க்கைமுறையில் உள்ள விநோத பழக்க வழக்கங்களைப்பத்தியும் செல்லுங்களேன்.

7:55 AM
பெயரில்லா சொன்னது…

Rams,
I did my schooling in VOC . Which year you did your +2.

Balakrishnan

11:49 AM
Karthik Jayanth சொன்னது…

ராம்ஸ்,

ஏன் மல்லாக்க படுக்கக்கூடாது என்று எப்படி உங்க உகாண்டா language ல கேக்குரது ?

ஒரு general knowledge than :-)

3:28 PM
பெயரில்லா சொன்னது…

ராம்ஸ் உங்கள் பதிவை தேசிபண்டிட்-ல் இணைத்து உள்ளேன். ஆட்சேபனை இருக்காது என நம்புகிறேன்.

சுவாரசியமாக எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள் தொடருங்கள்.

http://www.desipundit.com/2006/02/14/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%89%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be/

3:03 AM
Costal Demon சொன்னது…

நன்றி சந்தோஷ்,

இவங்க வாழ்க்கைமுறை நீங்க சொன்ன மாதிரி கொஞ்சம் வினேதமாத்தான் இருக்கு. காமொடியாகவும் இருக்கு.

5:44 AM
Costal Demon சொன்னது…

பாலா,

நான் 1993 மார்ச்ல +2 முடிச்சேன். உங்க பள்ளி பக்கத்திலே பழனி ஆண்டவர் கோவில் தெருலதான் எங்க வீடும் இருக்கு...

5:47 AM
Costal Demon சொன்னது…

வாங்க கார்த்திக்,

நம்ம நாட்ல எப்படி மாநிலத்துக்கு மாநிலம் வேற வெற மொழி பேசுறமோ, அப்படி இங்க மாவட்டத்துக்கு மாவட்டம் வேற வேற மொழி பேசுறாங்க. இந்த மாவட்டத்துல பேசுற மொழி பக்கத்துல 40 கி.மீ தள்ளி இருக்கிற பக்கத்து மாவட்டத்துக்காரனுக்கு புரியாது. ஆங்கிலம்தான் ஒரே வழி.... இருந்தாலும் ஜெனரல் நாலெட்ஜ்ல உங்களுக்கு இருக்கிற ஆர்வம் மெய் சிலீர்க்க வைக்குது :-)

5:54 AM
Costal Demon சொன்னது…

வாங்க Dubukku,

வந்ததுக்கு நன்றி... அது மட்டுமில்லாம உபகாரம் வேற பண்ணியிருக்கீங்க... ரொம்ப நன்றி...

6:21 AM
தருமி சொன்னது…

அது வேறு உலகம்...இல்ல? எப்படி manage பண்றீங்க?

2:32 PM