India

Uganda

United Kingdom

Malaysia

31. Manchester கதைகள்...

சனி, ஜூன் 07, 2008

முந்தா நேத்து எங்க லேப்ல இருந்த ஸ்பெக்ட்ரோ சரியா வேலை செய்யலேன்னு பக்கத்து லேபுக்கு போயிருந்தேன். வழக்கம் போல பேனாவை எடுத்துட்டுப் போகலை. சரீன்னு அங்க இருந்த ஒரு பேனாவை எடுத்து எழுத ஆரம்பிச்சேன். கொஞ்ச நேரத்துல கை வழக்கம் போல பேனாவை வாய்க்கு எடுத்துட்டு போச்சு. அப்பத்தான் பேனா முனையில ஏதோ எழுதி இருந்ததைக் கவனிச்சேன். உத்துக் கவனிச்சு எழுத்துக் கூட்டிப் படிச்சா...."Don't chew... Cyanide dipped..." ன்னு ஏதோ மெக்டொனால்ட்ல ஸ்வீட் சில்லி ஸாஸ்ல...