India

Uganda

United Kingdom

Malaysia

45. கை பரபரக்குது...

சனி, மே 12, 2012

இந்தப் பிரச்சினை இப்போது கொஞ்சம் அளவு கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அது எனக்கும் நன்றாகவே தெரிகிறது. ஆனால் எப்படி இதிலிருந்து மீளுவதென்று தெரியவில்லை. சின்னப் புள்ளத்தனமாத்தான் இருக்கு. ஆனா என்ன செய்யுறதுன்னு தெரியலையே.... அப்படி என்னதான்டா உன் பிரச்சினைன்னு கேக்குறீங்களா? தேவையில்லாத பொருட்களா வாங்கிக் குவிக்கிற ஆசைதாங்க அது. அப்படி என்னத்தடா வாங்கிக் கிழிச்சேன்றீங்களா? இந்தப் பிரச்சினை முதல்ல லாப்டாப்பிலேருந்து தொடங்குச்சுங்க. முதல்ல...

44. என்ன கொடுமை சரவணன் இது?

திங்கள், பிப்ரவரி 27, 2012

"ஹலோ குமார்?" "ஹலோ?" "ஹலோ குமார்... நான் ராம்குமார் பேசறேன்." "ஹலோ... யார் பேசுறது." "நான் ராம்குமார் பேசறேன்." "கொஞ்சம் சத்தமா பேசுங்க... சரியா கேக்க மாட்டேங்கு... யார்னு சொன்னீங்க?" "சார்... நான் குமாரோட ஃபிரண்டு பேசறேன். குமார் இருக்காருங்களா?" "ஒங்க பேரு என்னா சொன்னீங்க?" "ராம்குமார் சார். நான் குமாரோட ஃபிர‌ண்டு. அவர் இருக்காருங்களா?" "இங்க சரியா கேக்க மாட்டேங்கு... எங்கேருந்து பேசறீங்க?" "நான் யூ.கே லேருந்து பேசறேன் சார்....

43. பிரிட்டனில் பொங்கல் விழா!

ஞாயிறு, ஜனவரி 22, 2012

இன்று Bracknell தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல்தான் முடிந்து போயிற்றே என்று யோசிக்காதீர்கள். அது அப்படித்தான். சரியாக 4 மணியளவில் கலைநிகழ்ச்சிகள் தொடங்கப் பட்டன. முதலில் குழந்தைகள் சிலர் ஆடிப் பாடினார்கள். பின்னர் ஒரு மெல்லிசைக் குழுவினர் கரோக்கி மூலம் பாடல்கள் பாடினர். அதன் பின்னர் சிறுவர் சிறுமியர்களுக்கான வினாடி வினா நடத்தப்பட்டது....