India

Uganda

United Kingdom

Malaysia

44. என்ன கொடுமை சரவணன் இது?

திங்கள், பிப்ரவரி 27, 2012


"ஹலோ குமார்?"

"ஹலோ?"

"ஹலோ குமார்... நான் ராம்குமார் பேசறேன்."

"ஹலோ... யார் பேசுறது."

"நான் ராம்குமார் பேசறேன்."

"கொஞ்சம் சத்தமா பேசுங்க... சரியா கேக்க மாட்டேங்கு... யார்னு சொன்னீங்க?"

"சார்... நான் குமாரோட ஃபிரண்டு பேசறேன். குமார் இருக்காருங்களா?"

"ஒங்க பேரு என்னா சொன்னீங்க?"

"ராம்குமார் சார். நான் குமாரோட ஃபிர‌ண்டு. அவர் இருக்காருங்களா?"

"இங்க சரியா கேக்க மாட்டேங்கு... எங்கேருந்து பேசறீங்க?"

"நான் யூ.கே லேருந்து பேசறேன் சார். நான் குமாரோட ஃபிரண்டு."

"சரியா கேக்கலைங்க. எங்கேருந்து பேசறீங்க?"

"மான்செஸ்டர்... யூ.கே-ல மான்செஸ்டர்லேருந்து பேசறேன் சார். "

"ஓ... யு ஆர் காலிங் ஃபிரம் மான்செஸ்டர்... குமார் இஸ் நாட் ஹியர். கால் ஆஃப்டர் ஹாஃப் ஆன் அவர்..."

???


2 கருத்துகள்:

முகுந்த்; Amma சொன்னது…

ஹாஹாஹா
உண்மை தாங்க..சிலர் நாம தமிழ்ல பேசினாலுமே அவங்க இங்லீசுல இப்படி தான் பேசி பீட்டர் விடுவாங்க.

12:01 பிற்பகல்
Ram சொன்னது…

அந்த நேரத்திலே உண்மையிலேயே எனக்கு பயங்கரமா சரிப்பு வந்துடுச்சு... :-)

9:49 பிற்பகல்