வன்முறை பயத்தில், தேர்தல் சமயத்தில் இங்கிருக்க வேண்டாமென்று, நிறைய இந்தியர்கள் இங்கிருந்து இந்தியாவிற்கோ, அல்லது பக்கத்திலிருக்கும் கென்யாவிற்கோ குடும்பத்தை அனுப்பி விட்டனர். இவர்கள் கொடுத்த பில்ட் அப்பில் நான் கூட தேர்தல் சமயத்தில் வன்முறை ஏதேனும் நிகழக்கூடும் என்ற பயத்தில் ஒரு வாரத்திற்குத் தேவையான பொருட்களை ஸ்டாக் செய்து வைத்திருந்தேன். எந்த அசம்பாவிதமும் இல்லாமல், அமைதியாக தேர்தல் முடிந்து, முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. எதிர்பார்த்தது...
18. தேர்தல் கால வதந்திகள்...
வெள்ளி, பிப்ரவரி 24, 2006
நேற்று தேர்தல். தேர்தலுக்கு ஒரு 15 நாட்களுக்கு முன்னரே, கடைகள் அனைத்தும் அடைக்கப் பட்டு விடும் என்று, ஒரு மாதத்திற்கு முன்னால் கூறப்பட்டது. அது ஒரு வாரமாகச் சுருங்கி, பின் மூன்று நாட்களாகி, கடைசியில், தேர்தலுக்கு முந்தைய நாள் வரை எல்லாக் கடைகளும் திறந்தே இருந்தன. வழக்கத்திற்கு மாறாக, நாடே அமைதியாக இருக்கிறது. நேற்று இரவு முதலே, வதந்திகள் உலா வரத் தொடங்கி விட்டன. எதிர்க்கட்சி (The Forum for Democratic Change - NRM)ஐ சேர்ந்த Col. Besigye...
17. என் பதிவைக் காணோமுங்க...
திங்கள், பிப்ரவரி 20, 2006
நீளமான பேர் வச்சதனாலயோ என்னவோ தெரியல, பதிவ காணவே காணோம். அதுக்குதான் இது. பிடிக்காத விசயங்களைப் பற்றி எழுவதற்கு எளிதாக இருந்தது.. நல்ல விசயங்களைப் பற்றி எழுத வெகு நேரம் யோசிக்க வேண்டியிருக்கிறது.. என் தவறுதான், ஒப்புக் கொள்கிறேன்...இங்கு வரும் வரை வணக்கம் சொல்லுதல் என்பதே ஒரு மாதிரியான, தர்ம சங்கடமான காரியமாக இருந்தது. மற்றவர் பதிலுக்கு வணக்கம் சொல்லாமலோ அல்லது கவனிக்காமலோ போய் விட்டால் அசிங்கமாகப் போய் விடுமே என்ற அச்சம்தான் காரணம். என்...
16. மழைக் கால உகாண்டா...
வியாழன், பிப்ரவரி 16, 2006
மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இரவில் வெக்கை தணிந்து இதமான குளிர் தெரிகிறது. மின்விசிறிகள் தேவைப்படாத இரவுகள் காத்திருப்பது போல் தோன்றுகிறது. மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியாத நிலையில், இது போன்ற கால நிலை, இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சராசரியாக 36 டிகிரி வெப்பநிலையில் வாழ்ந்து பழகியிருக்கும் எனக்கே இங்கே புழுங்குகிறது என்றால், சராசரியாக 22 முதல் 26 டிகிரியில் வாழ்ந்து பழகியிருக்கும் இம் மக்களை நினைத்தால்...
15. நைல் நதி நாடு..
திங்கள், பிப்ரவரி 13, 2006
அதிகாலை 3.30 க்கு பலத்த துப்பாக்கி சத்தம் காரணமாக முழிப்பு வந்து விட்டது. உகாண்டவில் இது ஒன்றும் புதிதல்ல. முதன்முதலில் இங்கே வந்த போது, அலுவலகத்தில் கொடுத்த முதல் அறிவுரையே, பாதுகாப்பு பற்றியதுதான்.. தனியே எங்கும் செல்ல வேண்டாம், துப்பாக்கிச் சண்டை நடந்தால் உடனடியாக தரையில் குப்பறடிக்க படுத்துக் கொள்ளுங்கள் (ஏன் மல்லாக்க படுக்கக்கூடாது என்று அவர்கள் விளக்க வில்லை), தனியாகவோ, அல்லது சிறு குழுவாகவோ செல்லும் போது, யாரேனும் தாக்கினால் (பணத்திற்காக...
14. நதியா.. நதியா.. நைல் நதியா..??
செவ்வாய், பிப்ரவரி 07, 2006
உலகின் மிக நீளமான நதி, எகிப்த்தின் கொடை என்றெல்லாம் வர்ணிக்கப்படும் நைல் நதியின் பிறப்பிடம் (வெள்ளை நைல்) சாட்சாத், தற்சமயம் அடியேன் குடி கொண்டிருக்கும் இந்தப் புண்ணிய பூமிதான். முதன் முதலாக நைலைப் பார்த்த போது ஏற்பட்ட பிரமிப்பு, முதன்முதலாக காவிரியைப் பார்த்த போது ஏற்பட்ட பிரமிப்பிற்கு சற்றும் குறையாதது.கென்யா, தான்சானியா மற்றும் உகாண்டா எனப் பரந்து விரிந்திருக்கும், விக்டோரியா ஏரிதான் நைலின் மூலம். புசியா-விலிருந்து பார்க்கும் போது, மிகவும்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)