India

Uganda

United Kingdom

Malaysia

23. காணாமல் போன பதிவு...

திங்கள், மே 01, 2006

பிளாக்கரில் என்ன பிரச்சினையோ தெரியவில்லை. இந்தப் பதிவு இரண்டு முறை வெளியிட்டும், டாஸ்போர்டில் தெரியவே மாட்டேனென்கிறது. பின்னூட்ட்மும் வேலை செய்ய மாட்டெனென்கிறது ( தகவல் நன்றி துளசி மேடம்). மூன்றாவது முறையாக முயற்சிக்கிறேன். வருகிறதா பார்க்கலாம.
================================================================

நிறைய நாட்கள் எந்தப் பதிவும் போடாததால், சந்தோசப் படுகிற மக்கள்தொகை அதிகமாகிவிட்ட செய்தி கிடைத்ததனால் அவசர அவசரமாக இந்தப் பதிவு

கொஞ்சம் கொஞ்சமாகவாவது மழை பெய்வதால், 62 மணி நேரத்தில், 48 மணி நேரம் மின்சாரம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த சந்தோசம் மனதைத் தொடும் முன்னரே 3 நாட்களுக்கு தண்ணீரைத் துண்டித்து புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறது தண்ணீர் வாரியம். கஷ்டத்தைப் போக்க ஒரே வழி, மழை பெய்யும் போது, ஏதேனும் அலுவலக காரணத்தைச் சொல்லி வெளியில் சுற்ற வேண்டியதுதான். மழையில் நனைந்த மாதிரியும் ஆயிற்று, குளித்த மாதிரியும் ஆயிற்று. வீடு நாறத் தொடங்கும் முன்னர், தண்ணீர் கிடைக்க உட்டாலக்கடி சாமியாரை வேண்டுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.


ோடா போடா காரர்களிடம் கொஞ்சம் பணம் கொடுத்தால், அன்றைய தினம் கழுவிக் கொள்ள ஒரு ஜெரிக்கானில் (கேனில்) தண்ணீர் கிடைக்கிறது. குளிக்க மழையையும், கழுவ போடா போடா காரர்களையும் நம்பி பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.
================================================================

சரி ரொம்ப போரடிக்கிறதே இவர்களிடம் ஏதாவது கதையடித்து நேரத்தைப் போக்கலாம் என்று முடிவு செய்தேன்.முந்தா நாள் சேம்பியன்ஸ் ட்ரோபியில் பார்சிலோனா வெற்றி பெற்றதை வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள். அவர்கள் சந்தோசத்தில் பங்கு கொள்ள எண்ணி ரொணால்டோ சூப்பரா விளையாடினாருல்ல (ஏதோ நமக்கு தெரிஞ்ச நாலஞ்சு பேரில ஒண்ணு...நல்லவேளை பீலே கலக்கினாருல்ல என்று சொல்லவில்லை...)என்று சொல்லி அசடு வழிந்த போது, அவர்கள் பார்த்த பார்வையில் இருந்தது இளக்காரமா அல்லது பரிதாபமா என்று தெரியவில்லை. இங்கே நான் சந்திக்கும் இரண்டாவது பிரச்சினை இது.முதலாவது, இந்தி தெரியாதது, இரண்டாவது, கிரிக்கெட் மட்டுமே தெரிந்திருப்பது.இந்தி பேசுரவன்கிட்ட சகஜமா பேச முடியல, ஏன்னா நமக்கு இந்தி தெரியாது. சரி இங்கிலீஸ் பேசுர ஆப்பிரிக்கன் கிட்ட பேசலாம்னா அவனுக்கு பிடிச்ச விசயங்கள்ல நமக்கு பரிட்ச்யம் இல்லை. கவுண்டர் சொன்ன மாதிரி, கல்லக் கண்டா நாயக் காணோம், நாயக் கண்டா கல்லக் காணோம்...

கிளப் மாட்சிற்கே இந்த ஆட்டம் ஆடுபவர்கள் உலகக் கோப்பைக்கு என்ன ஆட்டம் ஆடுவார்களோ தெரியவில்லை. அதற்குள்ளாகவாவது, யார் யார் எந்த டீமில் விளையாடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.எந்த பார், ரெஸ்டாரண்ட், ஹோட்டல் என எங்கு சென்றாலும் TV யில் கால்பந்துதான் ஓடிக் கொண்டிருக்கிறது. இது போக சில இடங்களில், பெரிய திரையில் வேறு காட்டுவார்களாம்.
================================================================

சரி விளையாட்டை விடுங்கள், சாப்பாடு பற்றி பேசலாம் என்றால், இவர்கள் உண்பது, மட்டோக்கி எனப்படும், வாழைக்காயை நன்றாக வேக வைத்துத் தயாரிக்கப்படும் ஒரு வஸ்து, போஷோ எனப்படும், நம்மூர் குழைந்த பச்சரிசி சாதத்திற்கும், இட்லிக்கும் இடையிலான ஒரு தயாரிப்பு, மற்றும் ஆப்பிரிக்கன் சப்பாத்தி எனப்படும், ரப்பர் தட்டு போன்ற ஒரு சமாச்சாரம் என நமக்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது... பற்றாக்குறைக்கு, இவர்களுக்கு உரைப்பு என்று உச்சரித்தாலே கண்ணில் தண்ணீர் வந்துவிடும்...நம்மவர்கள் அதிகமாக காரம் சேர்த்துக் கொள்வதைப் பற்றிக் கிண்டலடிக்கிறார்கள்..(இந்தியர்கள் கழிவறையில் ஏன் டிஸ்யூ பேப்பர் உபயோகிப்பதில்லை தெரியுமா? இவர்கள் உண்கிற காரத்திற்கு, பேப்பரை அங்கே வைத்தவுடன் தீப்பற்றிக் கொள்ளும்..)

இந்தி படிப்பதை விட கால்பந்து பற்றி அறிந்து கொள்தல் சுலபம் என்று தோன்றுகிறது... இவை எல்லாவற்றுக்கும் மேலாக பார்க்கலாம், இன்னும் எத்தனை நாளுக்கு வருண பகவானும், போடா போடாகாரர்களும் கருணை காட்டுகிறார்கள் என்று...

6 கருத்துகள்:

Costal Demon சொன்னது…

test

2:44 PM
துளசி கோபால் சொன்னது…

அப்படி என்ன தண்ணிக் கஷ்டம் அங்கே?

இந்த விளையாட்டு விஷயத்துலே அங்கே கால்பந்துன்னா இங்கே ரக்பி. ஆனா இது விண்ட்டர்க்கு. சம்மருக்கு?
இருக்கவே இருக்கு கிரிக்கெட்டு.

டிஷ்யூ பேப்பர் த்ரீமச் ஆயிருச்சு:-))
ஆமாம், அதென்ன போடா போடா?????????

2:52 PM
Costal Demon சொன்னது…

வாங்க மேடம்,

லேக் விக்டோரியால தண்ணீர் குறைஞ்சுகிடே போகுதாம். அதான்...

போடா போடா தான் உகாண்டாவோட தேசிய வாகனம் மாதிரி... இந்த லிங்க் கை படிங்க..

http://ramrulz.blogspot.com/2006_01_29_ramrulz_archive.html

3:09 PM
Thendral O சொன்னது…

ராமு...உகாண்டாவில் மட்டும் இல்லப்பா.. நம்ம வட இந்தியாவிலும் ( உ. பி, பீகார், ம. பி.) இதே கதி தான். தினமும் 10 மணி நேரம் தான் மின்சாரம் கிடைக்கிறதுப்பா...(வருங்கால வல்லரசு ஆவது நிச்சயம் தான்!!!!!!!!!) மழையில் தனியாக நனைய வேண்டாம் ராமு..ஜலதோசம் பிடிச்சா யார் பார்துப்பா......

8:59 PM
Costal Demon சொன்னது…

வா ராசா,

பார்த்து ரொம்ப நாள் ஆச்சு...

/மழையில் தனியாக நனைய வேண்டாம் ராமு../

ஆகா ஆரம்பிச்சுட்டான்யா ... ஆரம்பிச்சுட்டான்யா...

10:07 PM
Thendral O சொன்னது…

ராமு...தேர்வு நேரம் என்பதால் கொஞ்சம் பிஸி..இனிமே அடிக்கடி பார்க்கலாம்..பேசலாம்..காசி.....டூ......உகாண்டா....ராசா ....டூ ராமு....என் வாசகம் வந்த வண்ணம் இருக்கும் ராமு....மீண்டும் வருவேன்யா...வருவேன்யா....உட்டாலக்டி சாமிகிட்ட சீக்கிரம் வரம் கேளுப்பா..(என்ன வரம்!!!!!!!!!) எனக்கும் சேர்த்து...பாத் மே மிலெங்கே..

2:19 PM