India

Uganda

United Kingdom

Malaysia

42. ஃபிலிம் காட்டுவது எப்படி!!!

ஞாயிறு, நவம்பர் 20, 2011

எனக்கு வெகு நாட்களாக லினக்ஸ் அடிப்படையிலான இயங்குதளத்தில் வேலை செய்யனும்னு ஆசைங்க. ஆனா பாருங்க, நான் ஒரு உயிரியல் வல்லுனனுங்க‌ (அடங்கொக்க மக்க..எம்புட்டு ஆசை!). இருந்தாலும் கணிப்பொறி-ல இந்தப் பசங்கள்லாம் ஆணி புடுங்கிறதப் பார்க்குறப்ப நாமலும் இப்படி பொட்டி தட்டுனா எப்படி இருக்கும்னு அப்பப்ப ஆசை வருமுங்க. ஆனா நம்ம பப்பெல்லாம்  இந்த சாஃப்ட்வேர் பண்ணாடைங்க கிட்டே வேகாதுன்னு நமக்கு நல்லாத் தெரியுமுங்க. அதனால எதையாவது அரைகுறையாவாவது படிச்சுட்டு, நம்மளைப் போன வீணாப் போன உயிரியல் வல்லுனனுங்க கிட்டேயே பீட்டர் விடனும்னு முடிவு பண்ணீட்டனுங்க. ஆனா அதிலேயும் பாருங்க, அங்கேயும் Bio-Statistics -ல (இதைத் தமிழல டைப் பண்ணா ரெம்ப காமெடியா இருக்குங்க..) வேலை செய்யுறவெனுங்க கிட்டேல்லாம் வெச்சுக்க முடியாதுங்க. இப்படில்லாம் சில பல ஆராய்ச்சிகள் பண்ணி யாருகிட்டேல்லாம் பீட்டர் உடனும்னு முடிவு பண்ணீட்டேங்க... ஆனா இந்த ஆராய்ச்சில்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமாத்தானுங்க அது நமக்கு உரைச்சது. அடடா இந்த மைக்ரோசாஃப்ட் ஆபீசை விட்டா நமக்கும் எதுமே தெரியாதே. இந்த எழவெடுத்த மைக்ரோசாஃப்ட் ஆபீசை எல்லாப் பண்ணாடைங்களும் நம்மளை விட நல்லா யூஸ் பண்ணுங்களேன்னு பல்ப் எரிஞ்சது. அப்போ வந்ததுதாங்க இந்த லினக்ஸ் ஐடியா... எப்படியாவது லினக்ஸ்சைப் படிச்சு இந்த அப்பாவி உயிரியல் வல்லுனனுங்க உயிரை எடுக்கிறதுன்னு முடிவு பண்ணீட்டேனுங்க... அதில பாருங்க, நாம ஒரு தடவை முடிவு பண்ணீட்டமுன்னா நம்ம பேச்சை எவனுமே கேட்க மாட்டானுங்க‌ (ஒரு காட்டன் டயலாக் கூட இல்லாம பதிவு போட்டா தற்கொலை பண்ணிக்கிடுவேன்னு அன்பா மிரட்டி லெட்டர் போட்ட திருப்பூர் சங்கருக்கு இந்த காட்டன் டயலாக் சமர்ப்பணம் - சமர்ப்பணம்னு ஏன் சொல்றேன்னா என்னோட முந்திய பதிவப் படிச்சுட்டு அய்யா அல்ரெடி மர்கயா!!).

சரி எப்படியாவது லினக்சைப் படிச்சுடலாம்னு, முதல்ல லினக்ஸை விண்டோஸுக்கு சைடியேயே இன்ஸ்டால் பண்ணினேன். ஆனா பாருங்க வயர்லெஸ், மவுஸ்லாம் வேலை செய்யலை. அதை எப்படி சரி பண்ணலாம்னு ஒரு நண்பரைப் பார்த்தேன். அவரு, எப்போப் பார்த்தாலும் ஒரு 27 இன்ச் ஆப்பிள் முன்னாடி உக்கார்ந்து சின்சியரா சாட் பண்ணீட்டு இருப்பார். அப்பப்போ நம்ம கிட்டே வந்து லினக்ஸ் ஐஒஎஸ் அப்படி இப்படின்லாம் பீலா உட்டிட்டு இருப்பார். சரின்னு அவர்கிட்டே இந்தப் பிரச்சினைகளைக் காட்டினா, அப்புறமாத்தான் தெரியுது, அவரு நம்ம கிட்டே உட்ட பீலால்லாம் அதுக்கு முந்தின நாளு நைட்ல மனப்பாடம் பண்ணீட்டு வந்ததுன்னு!!. நம்மளை மாதிரியே நிறைய பேரு இருக்காங்க போலிருக்கேன்னு நினைச்சுக்கிட்டு ஓடி வந்துட்டேன்.

சரி இது வேலைக்காகாதுன்னு, என்னோட நோட்பேடுல விண்டோசை எடுத்து விட்டுட்டு உபுண்டுவை இன்ஸ்டால் பண்ணீட்டேன். அதில மவுஸ் பிரச்சினை தீர்ந்தது. அப்புறம் கிட்டத்தட்ட ஒன்றரை நாள் ஆராய்ச்சி பண்ணி வயர்லெஸ் பிரச்சினையையும் சரி பண்ணீட்டேன். அப்புறமா பார்த்தா லினக்ஸ்ல மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் இல்லை. அதுக்குப் பதிலா ஓபன் ஆபீஸ்னு ஒன்னு இருந்தது. அது பார்கிறதுக்கு ஆபீஸ் மாதிரியேதான் இருந்தது. ஆனா பொறந்ததிலேருந்து மைசா (Microsoft ஐ சுருக்கி MS-னு வைக்கலாம்னா மைக்ரோசாஃப்ட்-ஐ சுருக்கி மைசா-ன்னு ஏன் வைக்கக் கூடாது?) ஆபீஸ் மட்டுமே யூஸ் பண்ணின எனக்கு ஓபன் ஆபீசைப் பார்த்த உடனே பிடிக்கலை. என்னடா செய்ய்லாம்னு வழக்கம் போல ஒன்றரை நாள் ஆராய்ச்சி பண்ணினா உபுண்டுல வைனை (WINE) இன்ஸ்டால் பண்ணினா மைசா ஆபீசையும் யூஸ் பண்ணிக்கலாம்னு தெரிஞ்சு அதையும் பண்ணீட்டேன். அப்புறமா இன்னொரு பிரச்சினை, விண்டோஸ்ல வலது பக்கம் இருக்கிற நிறைய விசயம் உபுண்டுல இடது பக்க இருக்குது. உதாரணமா ஏதாவது விண்டோவை மூடனும்னா பட்டன்லாம் இடது பக்கம் இருக்குது. இன்னொரு ஒன்றரை நாள், பட்டனெல்லாத்தையும் விண்டாஸ் மாதிரியே வலது பக்கத்துக்கு மாற்றியாச்சு. ஒரு வாரம் கஷ்டப்பட்டு எல்லாத்தையும் மாத்திட்டேன்.

விதைத்தாச்சு.. இப்போ அறுவடை பண்ணனும். மனைவி கிட்டே காட்டலாம், ஆனா அவள் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர். இருந்தாலும் பரவாயில்லைன்னு நம்ம புராடெக்ட் மேல் நம்பிக்கை (!) வச்சு, அவள் கிட்டேப் போய் "மனுசன் படைச்சதிலேயே உருப்படியான ரெண்டே விசயம். ஒன்னு நான், இன்னொன்னு நான் இன்ஸ்டால் பண்ணீருக்கிற இந்த உபுண்டு" அப்டீன்னு டயலாக் உட்டேன். நோட்புக்கை ஒரு பார்வை பார்த்துட்டு காறித்துப்பு விட்டாள். இப்படி எல்லாத்தையுமே விண்டோஸ் மாதிரி மாத்தி விண்டோஸ்ல இருக்கிற எல்லா சாஃப்வேரையும் இங்கே யூஸ் பண்றதுக்கு நீங்க விண்டோஸையே யூஸ் பண்ணலாமே, எதுக்கு உபுண்டு இன்ஸ்டால் பண்ணனும்னு செவுட்டில அடிச்ச மாதிரி கேட்டாள். இந்தக் கேள்வி கேட்டதுக்கு என்னை நீ கொன்னிருக்கலாம்னு சொன்னேன். சரீன்ட்டு அவ உடனே வெசத்தைத் தேடப் போய்ட்டா. நாலு பேர் கிட்டே பிலிம் காட்டனும்னு ஆசைப்பட்டது கடைசிலே உயிருக்கே ஆபத்தாயிப் போயிருச்சுங்க.... நீங்களே சொல்லுங்க, நான் பண்ணினது தப்பாங்க??? 

2 கருத்துகள்:

குலவுசனப்பிரியன் சொன்னது…

பல நுட்பியல்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற உங்கள் ஆர்வம் கண்டு மகிழ்கிறேன்.

லினக்சை பாவிக்க விருப்பமுள்ள பட்டறிவு மிக்கவர்கள்கூட, நடைமுறை சிக்கல்களால் அதை இடைமுகமாக வைத்துக் கொள்ள முடிவதில்லை. பெரும்பாலும் விண்டோஸ் அல்லது ஆப்பிள் மடிக்கணினிகளில் மென்பொருள்களை எழுதி, லினக்ஸ் நிறுவியுள்ள சேவியர் கணினிகளில் ஓட்டுகிறார்கள்.

எனவே லினக்ஸ் கற்றுக்கொள்ளும்போது அதை இடைமுகமாக ஆக்கிக்கொள்ள மெனக்கெடாமல், அதன் சேவியர் பயன்பாட்டை மட்டும் தெரிந்துகொள்வது போதுமானது.

உங்கள் உயிரியல் ஆய்வு பணிகளுக்கு பல கட்டற்ற மென்பொருள்கள் உதவலாம்.

காட்டாக இங்கே பார்க்கவும்.
http://freecode.com/search?q=biology&submit=Search

நன்றி.

3:19 AM
Costal Demon சொன்னது…

நன்றி குலவுசனப்பிரியன். நீங்கள் கொடுத்துள்ள சுட்டி மிகவும் உபயோகமானது. மிகவும் நன்றி!!!

9:43 PM