India

Uganda

United Kingdom

Malaysia

26. இதுதான் உகாண்டா...

சனி, ஜூன் 24, 2006

முதன்முதலாக இங்கே பார்மஸியில் நுழைந்த போது மிகவும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நிறைய பழைய மற்றும் புழக்கத்தில் இல்லாத மருந்து வகைகள் தென்பட்டன. புதிய மருந்துகள் வருகை மிகவும் தாமதமாகவே நடக்கிறது.

இவர்களக்கு அனைத்திலும் பெரிய பெரிய டின்கள்தான் வேண்டும். பாராசெட்டமாலில் தொடங்கி, குளோராம்பினிக்கால், ஆம்பிசிலின், அமாக்சிசிலின் முதலான ஆன்ட்டி பயாட்டிக்குகள் வரை எல்லாமே 1000, 500 மாத்திரைகள் கொண்ட டின்களில்தான் அதிகமாக மார்க்கெட்டில் விற்பனையாகின்றன‌. பிளிஸ்டரில் வரும் மருந்துகளை விட இவை மிகவும் விலை குறைவாக இருப்பதே காரணம்.

இருமலுக்குப் பயன்படும் லிங்டஸும் ஒரு லிட்டர் கேனில் கிடைக்கிறது. பிராண்டட் மருந்துகளின் விற்பனை முகவும் குறைவு, ஆனால் விலை அதிகம். அதனால் ஜெனிரிக் கம்பெனிகள்தான் சக்கை போடு போடுகின்றன. பாராசெட்டமாலை "பனடால்" என்கிற ஸ்மித் க்ளய்ம் பெயரில்தான் எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் வங்கும் போது, அதைக் கொடுத்தால் மறுத்து விட்டு லோக்கல் கம்பெனியின் பிராண்டை கேட்கிறார்கள். காரணம் விலை. ஒரு பாக்கெட்(100 மாத்திரைக‌ள்) பனடால் விலை கிட்டத்தட்ட 150 ரூபாய். லோக்கல் கம்பெனி 1000 மாத்திரைகள் கொண்ட டின் 125 ரூபாய். வேறு என்ன செய்வார்கள்?

மருந்துகள்தான் இப்படி என்றால், வைத்தியம் செய்பவர்கள் கதை அதற்கும் மேல். இங்கே ஒழுங்காக டாக்டருக்குப் படித்து பிராக்டீஸ் பண்ணுபவர்கள் மிகவும் குறைவு. மிகவும் குறைவான ஸீட்கள். மற்ற படிக்கு Clinical Officer எனப்படும் (நம்மூர் கம்பௌண்டர் மாதிரி) மூன்று வருட படிப்பு முடித்தவர்கள் டாக்டர்களைப் போலவே வைத்தியம் செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள். இவர்கள் போக நர்ஸுகளும் கிளினிக் வைத்து நடத்துகிறார்கள். இவ்வளவும் நடந்தும் நிறைய இடங்களில் மருத்துவ வசதி இல்லை என்பது வேதனையான விஷயம்.

இங்கே கொடிகட்டிப் பறப்பவர்கள் பார்மஸிட்கள் எனப்படும் மருந்தாளுனர்கள்தான். கல்லூரியில் சேர டாக்டருக்குத் தேவைப்படும் மதிப்பெண்களை விட பார்மஸி படிப்பிற்கு நிறையத் தேவைப் படுகிறது. காரணம் இடங்கள். சென்ற ஆண்டு வரை, பார்மஸி படிப்பிற்குப் பத்தே பத்து இடங்கள். இவர்களின் தேசிய யுனிவர்சிட்டியான Makarere University யில் மட்டுமே அட்மிஸன். போனால் போகிறதென்று போன வருடம் Mbarara University யிலும் பத்து இடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள். கற்பனை செய்து பாருங்கள் கிட்டத்தட்ட தமிழ்நாடு சைஸில் இருக்கும் ஒரு இடத்தில் வருடத்திற்கு பத்தே பார்மஸிஸ்டுகள். (தமிழ்நாட்டில் வருடத்திற்கு கிட்டத்தட்ட 1700 பேர்). பின் அவர்களுக்கு ஏன் இருக்காது மவுசு.

பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு பார்மஸிஸ்டும் இரண்டு பார்மஸியில் வேலை பார்க்க அனுமதிக்கப் படுகிறார்கள்.அப்படியும் பற்றாக்குறை. புதிதாக பார்மஸி வைக்க விரும்புபவர்கள் பார்மஸி படிக்கும் மாணவர்களை மூன்றாம் வருடத்திலேயே புக் பண்ணி விடுகிறார்கள். உபரியாக காலேஜ் ஃபீஸையும் கட்டி விடுகிறார்கள்). இவ்வளவு பற்றாக்குறை இருந்தும், வெளிநாட்டு பார்மஸி பட்டதாரிகளை அங்கீகரிப்பதில்லை. அவர்கள் மக்கரேரேயில் கிட்டத்தட்ட 6 மாதம் படித்து, 6 மாதம் பயிற்சி எடுத்த பின்தான் அங்கீகாரம்.

மலேரியாதான் பிரதான வியாதி. அடுத்தது எயிட்ஸ். வெகு காலமாக குயினினையும், க்ளோரோகுயினையும் பயன் படுத்தியதில், இப்போது அவை எதிர்ப்புத் தன்மை இழந்துவிட்டன. இனிமேல் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்துக் கட்டி விட்டு, புதிய வகை மலேரியா மருந்துகளை இலவசமாக வினியோகிக்கிறது அரசாங்கம்.மருத்துவமனை ஊழியர்கள் சிலர் அவற்றை வெளியே கடத்திவந்து விலைக்கு விற்பதை காணும் போது வருத்தமாக இருக்கிறது. வருத்தப் படுவதைத் தவிர வேறு வழியில்லை. இதுதான் உகாண்டா...

7 கருத்துகள்:

கதிர் சொன்னது…

அங்கயும் கம்பவுன்டரே மருத்துவர் அவதாரம் எடுக்கறாங்களா?

6:06 AM
Costal Demon சொன்னது…

கம்பௌண்டர் மட்டும் எடுத்தா பரவாயில்லை. மருந்துக் கடையிலே வேலை பார்த்த அனுபவம் இருக்கிறவங்க கூட டாக்டர் அவதாரம் எடுக்கிறாங்க.

வருமைக்கு நன்றிங்க...

1:34 AM
Costal Demon சொன்னது…

மன்னிச்சுடுங்க தம்பி,,

வருகைக்கு நன்றின்னு ச்ல்ல வந்தேன்..

1:57 AM
நாகை சிவா சொன்னது…

எங்க அப்பு, கொஞ்ச நாளா ஆளையே காணாம். நல்லா இருந்துச்சு... தொடர்ந்து எழுதுங்க...
உகாண்டாவுக்கு நம்ம மக்கள் அடிக்கடி வந்து போறாங்க.. சமயம் அமைந்தால் நானும் வருகின்றேன். எல்லாம் அந்த விக்டோரியாவை பாக்க தான்...........

2:59 AM
துளசி கோபால் சொன்னது…

ராம்,

அருமையா இருக்கு. பிஜித்தீவுகளில் கூட டின் மாத்திரைகள்தான். 1000 வாங்கிக்கலாம்.

நானும் வரேன், மருத்துவர் வேலை இன்னும் இருக்குல்லே:-))))

7:58 AM
Costal Demon சொன்னது…

வாங்க மேடம்,

தகவலுக்கு நன்றி... உங்களுக்கு இல்லாத வேலையா மேடம்? சாதாரண மருத்துவர் என்ன பெரிய சர்ஜனாகவே ஆயிடலாம் வாங்க :‍)

12:55 PM
Costal Demon சொன்னது…

வாங்க சிவா,

இங்க கம்பாலால நிறைய தமிழ் மக்கள் இருக்குறாங்க. கண்டிப்பா வாங்க.. முன்னாடியே சொல்லீட்டு வாங்க. கலக்கிடலாம்..

12:56 PM