எனக்கு வெகு நாட்களாக லினக்ஸ் அடிப்படையிலான இயங்குதளத்தில் வேலை செய்யனும்னு ஆசைங்க. ஆனா பாருங்க, நான் ஒரு உயிரியல் வல்லுனனுங்க (அடங்கொக்க மக்க..எம்புட்டு ஆசை!). இருந்தாலும் கணிப்பொறி-ல இந்தப் பசங்கள்லாம் ஆணி புடுங்கிறதப் பார்க்குறப்ப நாமலும் இப்படி பொட்டி தட்டுனா எப்படி இருக்கும்னு அப்பப்ப ஆசை வருமுங்க. ஆனா நம்ம பப்பெல்லாம் இந்த சாஃப்ட்வேர் பண்ணாடைங்க கிட்டே வேகாதுன்னு நமக்கு நல்லாத் தெரியுமுங்க. அதனால எதையாவது அரைகுறையாவாவது படிச்சுட்டு,...
41. தொலைபேசி... லாப்டாப்.... இப்போ அமேசான் கிண்டில்
வெள்ளி, நவம்பர் 11, 2011

அது நடந்தது அனேகமாக கி.பி 2000 என்று நினைக்கின்றேன். என் நண்பன் அசோக் அந்த வஸ்துவை மிக மிக ஜாக்கிரதையாக பையிலிருந்து எடுத்தான். என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனை சிறிதாகக் கூட ஃபோன்களை உருவாக்க முடியுமா என்றே தோன்றியது. அதுவரை நான் பார்த்ததெல்லாம் கார்ட்லெஸ் போன்களும், கிட்டத்தட்ட அதே சைஸிலிருந்த (Nokia 5160 என்று நினைக்கிறேன்) செல்ஃபோன்களும்தான். என் நண்பன்...
40. மற்றுமொரு இடைவேளை
செவ்வாய், நவம்பர் 08, 2011
2007 February -ல் கூட நான் மேற்படிப்பு படிப்பேன் என்பது எனக்குத் தெரியாது. 1998-ல் B.Pharmacy முடித்த பின் ஒரு நாள் கூட Pharmacist ஆகப் பணிபுரியாமல் Marketing-ல் சேர்ந்தேன், பணம் அதிகமாகக் கிடைக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக. நான்கு வருடங்கள் பட்டப்படிப்பு முடித்தவனுக்கு, அரசாங்க வேலைக்கு வாய்ப்பே இல்லை. தனியார் மருத்துவமனையில் 2,000 முதல் 4,000 ரூபாய் வரையும், மருந்துக் கம்பெனிகளில் Production Chemist-ஆகச் சேர்ந்தால் கிட்டத்தட்ட அதே அளவுக்கும்தான்...
39. சில புரியாத விசயங்கள்...
ஞாயிறு, ஜூலை 31, 2011
என்னை மிகவும் கோபமுண்டாக்கும் செயல்களில் ஒன்று ஆய்வகத்தில் அடுத்தவர்கள் என் அனுமதியில்லாமல் என்னுடைய பொருட்களை உபயோகப் படுத்துவது. ஏனென்றால் எடுத்த பொருட்களை திருப்பி வைக்கவும் மாட்டார்கள், நம்மிடம் சொல்லவும் மாட்டார்கள். நம்முடைய உபயோகத்திற்காக அவசரமாகத் தேடும் போது அவை இருக்காது. இது நம்மை மிகவும் எரிச்சலூட்டுவதோடு மட்டுமல்லாமல் வேலையையும் பாதிக்கும். ஆனால், நிறைய பேர் வேலை பார்க்கும் இடங்களில் ஒழுங்கு என்பதை அதிகமும் எதிர்பார்க்க...
38. இங்கிலாந்தில் ஓட்டளிக்கும் உரிமையை போராடி மீட்ட தமிழன்!!!
திங்கள், ஏப்ரல் 04, 2011
இங்கே போன ஞாயிற்றுக்கிழமையிலிருந்து கோடைகால நேரக் கணக்கு நடைமுறைக்கு வந்தது. அதாவது அன்றிலிருந்து இனி வரும் ஆறு மாதங்களுக்கு GMT+1 நேரம் யு.கே-ன் நேரமாகக் கணக்கில் கொள்ளப் படும். அதன் பிறகு ஆறு மாதங்களுக்கு GMT யு.கே-ன் நேரமாகக் கணக்கிடப் படும். இந்த நேர மாற்றம் முதலில் சில நாட்களுக்கு சற்றே குழப்பமாக இருக்கும். பின்னர் பழகிவிடும். இந்தியாவில் கோடை மற்றும் குளிர் காலங்களுக்கிடையே வித்தியாசம் கண்டறிவது வானிலை ஆய்வாளர்களுக்கே கடினமாக இருப்பதால்...
37. சீன அறிவியல் பத்திரிக்கைகளில் ஆய்வு முடிவுகளை வெளியிட மாட்டேன்... சீன மாணவன் சபதம்
திங்கள், ஜனவரி 24, 2011
எங்கள் ஆய்வுக்கூடத்தில் ஒரு சீன மாணவன் உண்டு. உண்மையில் கனடா தேசத்தவன். இவனுடைய எட்டு வயதில் அவன் பெற்றோர் கனடாவிற்குக் குடிபெயர்ந்தனர். பின்னர் பத்து வருடங்களுக்குப் பிறகு ஹாங்காங்கிற்கே திரும்பி வந்து விட்டனர். பையன் கனடா பாஸ்போர்ட்டுடனும் சீன முகத்துடனும் இருப்பான். அண்மையில் இவன் விடுமுறைக்காக ஹாங்காங் சென்றிருந்தான். அப்போது அங்கு பார்த்தவற்றை அவன் சொல்லிய போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக சீனர்கள் காப்பியடிப்பதில்...
36. 2011
ஞாயிறு, ஜனவரி 02, 2011
புது வருடப் பிறப்பை கடைசியாக எப்போது இந்தியாவில் கொண்டாடினேன்? 2005ல் என நினைக்கிறேன். 2006ல் கென்யா, 2007ல் ருவாண்டா, 2008ல் இங்கிலாந்து, 2009ல் பிரான்சு, இப்போது 2010ல் மறுபடியும் இங்கிலாந்து. (என்னது...இதெல்லாம் யாருக்குய்யா தேவையா? யூ சட்டாப் நான்சென்ஸ் இடியட், கருபுரு கருபுரு கருபுரு, யூ வார் அண்டர் அரெஸ்ட்...). வழக்கமாகப் பாட்டிலுடன் தொடங்கும் புதுவருடம் வாழ்க்கையிலேயே முதன்முறையாக இரவு 12 மணி பூஜையுடன் தெடங்கியிருக்கிறது. மனைவிக்கு...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)