India

Uganda

United Kingdom

Malaysia

10. கல்லூரி நினைவுகள்..

புதன், ஜனவரி 18, 2006

ஒரு தமிழ் பிளாக் ஆரம்பித்துவிட்டு, கல்லூரி நினைவுகளைப் பற்றி ஆட்டோகிராப் டைப்பில் ஒரு பதிவு போடவில்லையென்றால், கழுகுமலை உட்டாலக்கடி சாமியார் கனவில் வந்து கண்ணைக் குத்தி விடுவார் என நண்பன் ஒருவன் மிரட்டியதால் இந்தப் பதிவைப் போடவில்லை. கல்லூரியில் பழைய மாணவர்களெல்லாம் ஒன்றுகூடப் போகிறோம் என நண்பன் போட்ட கடிதம் பழைய நினைவுகளையெல்லாம் கிளறிவிட்டதாலேயே இந்தப் பதிவு. திட்ட வேண்டுமென்றால், காசியில் பனாரஸ் இந்து யுனிவர்சிடியில் லெக்சரராக இருக்கும் அவனைத் திட்டுங்கள்..

கல்லூரிகளில் கலாட்டாக்களும், காதல்களுமே நடக்கின்றன என தமிழ் சினிமாக்கள், தமிழர்களின் தலையில் கற்பூரத்தை ஏற்றி சத்தியம் செய்தாலும், என் கல்லூரி வாழ்க்கையில் அந்த அளவுக்கு கலாட்டாக்கள் நடந்ததாக நினைவில்லை..ஒரு சிலவற்றைத் தவிர..

முதல் வருடம் ஆண்டு இறுதித் தேர்வு என்று நினைவு..கெமிஸ்ட்ரி லேப்..தேர்வு கண்காணிப்பாளர் பக்கத்து ஊரிலிருக்கும் கல்லூரியிலிருந்து வந்திருந்தார்.. நண்பன் ஒருவன் படிப்பில் கொஞ்சம் சுமார்..(என்னைப் போலவே). அமைதியாக டைட்ரேசன் பண்ணிக் கொண்டிருந்தான். அதில் உபயோகிக்கப் படும் டைல் கொஞ்சம் தூசியாக இருந்திருக்கும் போல..(நிறமாற்றத்தை தெளிவாக காண வெள்ளை நிற டைல் உபயோகப் படுத்துவார்கள்). கண்காணிப்பாளர் தூசியை கவனித்திருப்பார் போல... நண்பனின் அருகில் வந்தார். என்ன இது என்றார். பொட்டாசியம் பெர் மாங்கனேட் என்றான் நண்பன் சின்சியராக. அதக் கேக்கல..கீழ இருக்கே அது என்னது என்றார். டைல் என்கிற வார்த்தை மறந்து போயிருந்தபடியால் மார்பிள் என்றான் நண்பன். அதிலேயே அவருக்குக் கொஞ்சம் மண்டை காய்ந்து போய் விட்டது. அதோடு விட்டிருக்கலாம்..ஆனால் அவர், இருக்கட்டும்.. அத எதுக்கு உபயோகப் படுத்துறாங்க தெரியுமா என்றார். அதற்கு நண்பன் சொன்ன பதிலில் ஆடிப் போன அவர், கொஞ்ச நாட்களுக்கு, சேது விக்ரம் மாதிரி சுற்றிக் கொண்டிருந்தார் எனக் கேள்விப் பட்டேன். நிறமாற்றத்தை அறியப் பயன்படும் டைலுக்கு, நண்பனின் விளக்கம்....ஹைட்டு பத்தல சார், அதான் வச்சிருக்கேன்.

6 கருத்துகள்:

Muthu சொன்னது…

பொதுவாக தங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைக் கூறும்போது நண்பர் ஒருவர் என்று ஆரம்பிப்பது சகஜமாமே :-).

7:58 AM
Costal Demon சொன்னது…

கண்டு பிடிச்சுட்டீங்களா?? கில்லாடிங்க நீங்க..வருகை தந்தமைக்கு நன்றி..

8:03 AM
நாமக்கல் சிபி சொன்னது…

உங்க (நண்பரின்) பதிலைப் பார்த்து நானும் கொஞ்சம் ஆடித்தான் போய்ட்டேன். ஆனாலும் சிரிப்பை அடக்க முடியலை.

12:55 AM
நாமக்கல் சிபி சொன்னது…

கல்லூரின்னாலே காமெடி, காதல், டிராஜெடி(எக்ஸாமும் ரிசல்ட்டும்)
இதெல்லாம் கண்டிப்பா இருக்கும்.

நிறைய பதிவு செய்ங்க.

12:57 AM
Costal Demon சொன்னது…

நம்ம புகைப்படத்தை இன்னும் கொஞ்சம் மங்கலாக்கனும் போலிருக்கு...எல்லோரும் கண்டுபிடிச்சிராங்க...

நன்றி, ரமா, சிபி. சிபி சார், நான் உங்க ஊர் பக்கத்துல இருக்கிற கலேஜ்லதான் படிச்சேன். திருச்செங்கோடு, விவேகானந்தா..

3:10 AM
Karthik Jayanth சொன்னது…

:-)) college days are indeed very memorable .

3:55 AM