India

Uganda

United Kingdom

Malaysia

27. தைரியமான ஆண்களுக்கு மட்டும்....

புதன், நவம்பர் 22, 2006

நம்மூர் ஆண்கள் தைரியத்தை வெளிக்காட்ட, ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது போல, இங்கே ஒரு குறிப்பிட்ட இன மக்கள் ஒரு காரியம் செய்து தங்கள் தைரியத்தை வெளிக்காட்டுகிறார்கள். முகிசு என்ற அந்த இனத்தில் பிறந்த ஆண்கள் அனைவரும் கண்டிப்பாக அந்த வீர சாகசத்தைப் பண்ணியாக வேண்டும். அதுவும் சிறு வயதில் இதை செய்து காட்ட அனுமதி இல்லை. வயதுக்கு வந்த ஆண்கள் (!) மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த சாகசத்தை செய்யாவிட்டால் அந்த ஆணைத் திருமணம் செய்ய எந்த...

26. இதுதான் உகாண்டா...

சனி, ஜூன் 24, 2006

முதன்முதலாக இங்கே பார்மஸியில் நுழைந்த போது மிகவும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நிறைய பழைய மற்றும் புழக்கத்தில் இல்லாத மருந்து வகைகள் தென்பட்டன. புதிய மருந்துகள் வருகை மிகவும் தாமதமாகவே நடக்கிறது. இவர்களக்கு அனைத்திலும் பெரிய பெரிய டின்கள்தான் வேண்டும். பாராசெட்டமாலில் தொடங்கி, குளோராம்பினிக்கால், ஆம்பிசிலின், அமாக்சிசிலின் முதலான ஆன்ட்டி பயாட்டிக்குகள் வரை எல்லாமே 1000, 500 மாத்திரைகள் கொண்ட டின்களில்தான் அதிகமாக மார்க்கெட்டில் விற்பனையாகின்றன‌....

25. இந்தியாவை மிஞ்சி விட்டது உகாண்டா...

புதன், ஜூன் 21, 2006

இந்தியாவில் இருந்த போது, உலகிலேயே அங்கேதான் லஞ்சம் அதிகமாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கே வந்த பின்பு, இந்தியா எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது. ஏதெனும் திருட்டு போய் விட்டது என்று புகார் கொடுக்க காவல் நிலையம் சொன்றால், புகாரை வாங்குவதில் ஆரம்பிக்கும் உங்கள் தண்டச் செலவு. வெளிநாட்டவர் என்றால் ஸ்பெசல் ரேட். உள்ளூர்காரர்களுக்கு கொஞ்சம் தள்ளுபடி கிடைக்கும். புகாரை வாங்கின மறுநாளே, கடமையே கண்ணாயிணாராக காலங்கார்த்தால் உங்களைச் சந்திக்க...

25. ஒரு படக் கதை...

ஞாயிறு, ஜூன் 18, 2006

காலைலே எழுந்திச்ச உடனே இப்படி கண்ணை மூடிக்கிட்டு யோகா பண்ணனும்னு அம்மா சொல்லி இருக்காங்க...யோகாவை முடிச்சுட்டு ஃப்ரெஷா குளிச்சுட்டு வரனுமாம்...யாருப்பா அது, கைல கிலுகிலுப்பை எல்லாம் குடுத்து விளையாடச் சொல்றது... அதெல்லாம் சின்னப் பசங்க விளையாட வேண்டியது... ஹையா... ஸ்டெதஸ்கோப் கிடைச்சாச்சு... நான் டாக்டராயிட்டேன்...நான் டாக்டரானது தெரிஞ்ச உடனே வெளில ஒரே பேஸண்ட்ஸ்...

24. உகாண்டா நிலவரம்.... கலவரம்???

சனி, மே 20, 2006

அங்கே தமிழ்நாட்டில், கலைஞர் ஆட்சியேற்பதற்கு முந்தின நாள் சாயங்காலம், இங்கே, முசிவேனி மூன்றாம் முறையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார். அங்கே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டாம் நாளில், இங்கே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு மாதங்கள் கழிந்து...கடந்த 20 ஆண்டுகளில் முசிவேனி, பதவியேற்கும் நான்காவது விழா இது. 1985 ல் Milton Obote யிடமிருந்து, பதவியைப் பறித்த,Titi Okello விடமிருந்து நாட்டைக் காப்பாற்ற National resistance Army...

23. காணாமல் போன பதிவு...

திங்கள், மே 01, 2006

பிளாக்கரில் என்ன பிரச்சினையோ தெரியவில்லை. இந்தப் பதிவு இரண்டு முறை வெளியிட்டும், டாஸ்போர்டில் தெரியவே மாட்டேனென்கிறது. பின்னூட்ட்மும் வேலை செய்ய மாட்டெனென்கிறது ( தகவல் நன்றி துளசி மேடம்). மூன்றாவது முறையாக முயற்சிக்கிறேன். வருகிறதா பார்க்கலாம. ================================================================நிறைய நாட்கள் எந்தப் பதிவும் போடாததால், சந்தோசப் படுகிற மக்கள்தொகை அதிகமாகிவிட்ட செய்தி கிடைத்ததனால் அவசர அவசரமாக இந்தப் பதிவுகொஞ்சம்...

22. நான் Muzungu வான கதை...

செவ்வாய், ஏப்ரல் 11, 2006

வயது அதிகமாகிக் கொண்டே போவதை நினைவு படுத்தும் சமாச்சாரமாக இருப்பதால், நான் பிறந்த நாளெல்லாம் கொண்டாடுவதில்லை. பெற்றோரும், உடன்பிறந்தோரும் ஃபோனில் வாழ்த்துச் சொல்லும் போதுதான் அன்று பிறந்த நாள் என்பதே நினைவுக்கு வரும்.பிறருடைய பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் அதிகமாகக் கலந்து கொண்டதில்லை. (என் தம்பியுடையதைத் தவிர... காரணம் அவன் பிறந்த தினம்... டிசம்பர் 25). இங்கே...

21. முடிவைத் தொடங்கி வைக்கிறேன்...

வியாழன், மார்ச் 16, 2006

நம்மளையும் ஒரு மனுசனா மதிச்சு, நாலு சங்கிலில சேர்த்து விட்டிருக்குற நம்ம இதயக்கனி, பாசத்த்லைவர், அன்பு அண்ணன் மணியன் அவர்களுக்கு, கம்பாலா பாம்போ ரோட்டின் நடுவில் சிலை வைக்க போராட்டம் நடத்த ஏற்பாடு செய்தாகி விட்டது. :-)இனி நம்ம நாலுகள்...1. பிடித்த நாலு உணவு வகைகள்:சொல்ல நினைப்பது:1. கம்மஞ் சோறும், கருவாட்டுக் குழம்பும்2. பழைய சோறும், சின்ன வெங்காயமும்3. புரோட்டாவும், காரமான சால்னாவும்4. அம்மா கைவண்ணத்தில் மல்லிகைப்பூ இட்லியும், தொட்டுக்கப்...

20. பிங்க் நிற மனிதர்கள்...

வெள்ளி, மார்ச் 10, 2006

இங்கே வந்த புதிதில், இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது சற்று சிரமமான காரியமாக இருந்தது. காரணம் நூற்றுக்கு 90 சதவீதம் ஆண்கள் தலையை சுத்தமாக மழித்திருப்பதுதான். பெண்களும் நிறைய பேர் மொட்டைத்தலையுடன்தான் இருக்கிறார்கள். இயற்கையாக இவர்கள் முடி மிகவும் சுருட்டையாகவும், மெலிதான் பஞ்சு போல் இருப்பதாலும், படிவதில்லை. முடி நிறைய வளர்ந்தால் கிட்டத்தட்ட சாய்பாபா style ல்...

19. ஏர்லைன்சுகளுக்கு மொய் எழுதியவர்கள்...

ஞாயிறு, பிப்ரவரி 26, 2006

வன்முறை பயத்தில், தேர்தல் சமயத்தில் இங்கிருக்க வேண்டாமென்று, நிறைய இந்தியர்கள் இங்கிருந்து இந்தியாவிற்கோ, அல்லது பக்கத்திலிருக்கும் கென்யாவிற்கோ குடும்பத்தை அனுப்பி விட்டனர். இவர்கள் கொடுத்த பில்ட் அப்பில் நான் கூட தேர்தல் சமயத்தில் வன்முறை ஏதேனும் நிகழக்கூடும் என்ற பயத்தில் ஒரு வாரத்திற்குத் தேவையான பொருட்களை ஸ்டாக் செய்து வைத்திருந்தேன். எந்த அசம்பாவிதமும் இல்லாமல், அமைதியாக தேர்தல் முடிந்து, முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. எதிர்பார்த்தது...

18. தேர்தல் கால வதந்திகள்...

வெள்ளி, பிப்ரவரி 24, 2006

நேற்று தேர்தல். தேர்தலுக்கு ஒரு 15 நாட்களுக்கு முன்னரே, கடைகள் அனைத்தும் அடைக்கப் பட்டு விடும் என்று, ஒரு மாதத்திற்கு முன்னால் கூறப்பட்டது. அது ஒரு வாரமாகச் சுருங்கி, பின் மூன்று நாட்களாகி, கடைசியில், தேர்தலுக்கு முந்தைய நாள் வரை எல்லாக் கடைகளும் திறந்தே இருந்தன. வழக்கத்திற்கு மாறாக, நாடே அமைதியாக இருக்கிறது. நேற்று இரவு முதலே, வதந்திகள் உலா வரத் தொடங்கி விட்டன. எதிர்க்கட்சி (The Forum for Democratic Change - NRM)ஐ சேர்ந்த Col. Besigye...

17. என் பதிவைக் காணோமுங்க...

திங்கள், பிப்ரவரி 20, 2006

நீளமான பேர் வச்சதனாலயோ என்னவோ தெரியல, பதிவ காணவே காணோம். அதுக்குதான் இது. பிடிக்காத விசயங்களைப் பற்றி எழுவதற்கு எளிதாக இருந்தது.. நல்ல விசயங்களைப் பற்றி எழுத வெகு நேரம் யோசிக்க வேண்டியிருக்கிறது.. என் தவறுதான், ஒப்புக் கொள்கிறேன்...இங்கு வரும் வரை வணக்கம் சொல்லுதல் என்பதே ஒரு மாதிரியான, தர்ம சங்கடமான காரியமாக இருந்தது. மற்றவர் பதிலுக்கு வணக்கம் சொல்லாமலோ அல்லது கவனிக்காமலோ போய் விட்டால் அசிங்கமாகப் போய் விடுமே என்ற அச்சம்தான் காரணம். என்...

16. மழைக் கால உகாண்டா...

வியாழன், பிப்ரவரி 16, 2006

மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இரவில் வெக்கை தணிந்து இதமான குளிர் தெரிகிறது. மின்விசிறிகள் தேவைப்படாத இரவுகள் காத்திருப்பது போல் தோன்றுகிறது. மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியாத நிலையில், இது போன்ற கால நிலை, இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சராசரியாக 36 டிகிரி வெப்பநிலையில் வாழ்ந்து பழகியிருக்கும் எனக்கே இங்கே புழுங்குகிறது என்றால், சராசரியாக 22 முதல் 26 டிகிரியில் வாழ்ந்து பழகியிருக்கும் இம் மக்களை நினைத்தால்...

15. நைல் நதி நாடு..

திங்கள், பிப்ரவரி 13, 2006

அதிகாலை 3.30 க்கு பலத்த துப்பாக்கி சத்தம் காரணமாக முழிப்பு வந்து விட்டது. உகாண்டவில் இது ஒன்றும் புதிதல்ல. முதன்முதலில் இங்கே வந்த போது, அலுவலகத்தில் கொடுத்த முதல் அறிவுரையே, பாதுகாப்பு பற்றியதுதான்.. தனியே எங்கும் செல்ல வேண்டாம், துப்பாக்கிச் சண்டை நடந்தால் உடனடியாக தரையில் குப்பறடிக்க படுத்துக் கொள்ளுங்கள் (ஏன் மல்லாக்க படுக்கக்கூடாது என்று அவர்கள் விளக்க வில்லை), தனியாகவோ, அல்லது சிறு குழுவாகவோ செல்லும் போது, யாரேனும் தாக்கினால் (பணத்திற்காக...

14. நதியா.. நதியா.. நைல் நதியா..??

செவ்வாய், பிப்ரவரி 07, 2006

உலகின் மிக நீளமான நதி, எகிப்த்தின் கொடை என்றெல்லாம் வர்ணிக்கப்படும் நைல் நதியின் பிறப்பிடம் (வெள்ளை நைல்) சாட்சாத், தற்சமயம் அடியேன் குடி கொண்டிருக்கும் இந்தப் புண்ணிய பூமிதான். முதன் முதலாக நைலைப் பார்த்த போது ஏற்பட்ட பிரமிப்பு, முதன்முதலாக காவிரியைப் பார்த்த போது ஏற்பட்ட பிரமிப்பிற்கு சற்றும் குறையாதது.கென்யா, தான்சானியா மற்றும் உகாண்டா எனப் பரந்து விரிந்திருக்கும், விக்டோரியா ஏரிதான் நைலின் மூலம். புசியா-விலிருந்து பார்க்கும் போது, மிகவும்...

13. போடா...போடா...

செவ்வாய், ஜனவரி 31, 2006

உகாண்டவைப் பற்றிச் சொல்லும் போது, அவர்களின் தனித்துவமான போக்குவரத்து சாதனத்தைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. நம்மூரில் ஆட்டோக்கள் மாதிரி இவை இங்கே பயன்படுத்தப்படுகின்றன. பெயர்: போடா போடா, பெயரைக் கேட்டால் திட்டுகிறானே என்று பார்க்காதீர்கள். பெயரே அதுதான். Boda..Boda...உகாண்டாவில், அரசுக்கென்று சொந்தமாக பேரூந்துக் கழகமோ, விமானக் கம்பெனியோ கிடையாது...முன்னாடி...

12. காவிரி, பூமத்தியரேகை மற்றும் நான்...

ஞாயிறு, ஜனவரி 29, 2006

உகாண்டாவில் வேலை என்றவுடனேயே, ஏகப்பட்ட எதிர்மறையான விமரிசனங்கள். வேற நாடே கிடைக்கலையாக்கும்...போயும் போயும் உகாண்டாதான் கிடைச்சதாக்கும்...இதுக்குப் பேசாமா, பாத்துக்கிட்டு இருக்குற ரெப் வேலையவே பாக்கலாமுல்ல...இப்படி இலவச அறிவுரைகள் கொடுப்பதில், நம்மவர்களை அடித்துக் கொள்ள வேறு யாராலும் முடியாது. இது போதாதென்று, இடி அமீன் (இடி அமீன் நாடு கடத்தப்பட்ட விசயமே தெரியாதவர்கள்..), ஆப்பிரிக்கா முழுக்க பாலைவனம்தான், வெயில் தாங்க முடியாது(கனவிலாவது...

11. ஒரு பியர் பாட்டிலும் இரண்டு நண்பர்களும்...

வியாழன், ஜனவரி 19, 2006

அலுவல் நிமித்தமாக கம்பாலா சென்று விட்டதால், சில நாட்களாக, உங்களைக் கொடுமைப் படுத்த முடியவில்லை. மக்கள் மிகுந்த சந்தோசத்திலிருப்பது எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத விசயமென்பதால்,விரைவாக வந்து விட்டேன். இதற்கிடையில் கல்லூரி நினைவுகள் பாகம் இரண்டு என்று சொத்தை தலைப்பைப் போட்டு எங்கள் கதையை யாரும் படிக்காத மாதிரி செய்து விட்டாயே, என சம்பந்தப் பட்ட இரண்டு நண்பர்களும்...

10. கல்லூரி நினைவுகள்..

புதன், ஜனவரி 18, 2006

ஒரு தமிழ் பிளாக் ஆரம்பித்துவிட்டு, கல்லூரி நினைவுகளைப் பற்றி ஆட்டோகிராப் டைப்பில் ஒரு பதிவு போடவில்லையென்றால், கழுகுமலை உட்டாலக்கடி சாமியார் கனவில் வந்து கண்ணைக் குத்தி விடுவார் என நண்பன் ஒருவன் மிரட்டியதால் இந்தப் பதிவைப் போடவில்லை. கல்லூரியில் பழைய மாணவர்களெல்லாம் ஒன்றுகூடப் போகிறோம் என நண்பன் போட்ட கடிதம் பழைய நினைவுகளையெல்லாம் கிளறிவிட்டதாலேயே இந்தப் பதிவு. திட்ட வேண்டுமென்றால், காசியில் பனாரஸ் இந்து யுனிவர்சிடியில் லெக்சரராக இருக்கும்...

9. கடவுள்

செவ்வாய், ஜனவரி 17, 2006

எனக்கு நிறைய நாட்களாகவே ஒரு விசயம் புரியவில்லை. ஏன் எல்லா கடவுள்களுமே, அல்லது இறை தூதர்களுமே ஒரே ஒரு கண்டத்திலேயே (ஆசியா)அவதரித்துள்ளனர்?? யேசு, முகமது நபிகள், புத்தர், மகாவீரர் மற்றும் நமது மக்கள்தொகைக்கு இணையான எண்ணிக்கையிலிருக்கும் இந்து கடவுள்கள் எல்லோருமே ஆசியாவிலேயே அவதரிக்க என்ன காரணம் இருந்திருக்கக் கூடும்?? ஒருவேளை கடவுள்கள் எல்லோருமே ஆசியர்களின் கற்பனைத் திறனுக்கும், மார்க்கெட்டிங் திறமைக்குமான எடுத்துக் காட்டுகளா?? யாருக்காவது...

8. எது ஏழை நாடு..?

திங்கள், ஜனவரி 16, 2006

ஏழை நாடு என்பதற்கான உண்மையான அளவுகோல் எது? நம் ஊரில் ஏழைகள் எங்கே குடியிருப்பார்கள்? பணக்காரர்களை விட, வசதி பட்டுமல்ல, வாடகையும் குறைவாக இருக்கும் இடத்தில் இருப்பார்கள். விலை குறைவாக இருக்கும் பொருட்களை வாங்குவார்கள். ஆடம்பரப் பொருட்களை அவ்வளவாக உபயோகிக்க மாட்டார்கள்.ஏழைகள் அதிகம் இருக்கும் நாட்டைத்தானே ஏழை நாடு என்று அழைக்க வேண்டும்?? ஏன் உகண்டாவை ஏழை நாடு என்று அழைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. காரணம், விலைவாசி நம் நாட்டை விட அதிகமாகவே...

7. தேர்தல் கூத்துகள்...

திங்கள், ஜனவரி 16, 2006

தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்தே, ஒரு விதமான இறுக்கமான சூழ்நிலையை உணர முடிகிறது. இருபது வருடங்களாக ஆட்சியிலிருக்கிறார் தற்போதய ஜனாதிபதி. அதிருப்தி, எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதான். இங்கே மருத்துவராக இருக்கும், ஆப்பிரிக்க நண்பர் ஒருவர், ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் என்பது உங்கள் நாட்டைப் போல் அவ்வளவு எளிதான காரியமல்ல என்றார். இம்முறை எதிர்க்கட்சியை சேர்ந்தவருக்குக்கும் நிறைய கூட்டம் சேர்கிறதே என்றேன். ஒவ்வொரு முறையும் அப்படித்தான் என்கிறார்....

6. ஒருவேளை தொழில்நுட்பக் கோளாறோ..?

சனி, ஜனவரி 14, 2006

அய்யா, நம்ம நியோ கவுண்ட்டர் யார் யாரோ அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலிலேருந்தெல்லாம் படிக்கிறாங்கன்னு காட்டுதய்யா..நிஜமாகவே யாரும் பார்க்குறீங்களா, இல்ல ஏதாவது பிரம்மையா..இல்ல ஏதாவது தொழில்நுட்பக் கோளாறா..? அய்யா, யாராவது பின்னூடத்துல போடுங்கையா..தனியா இருக்க பயமா இருக்குய்யா..ஏன்னே தெரியல..நம்மள எந்த திரட்டியும் ஏத்துக்க மாட்டேங்குறாங்கைய்யா. ..டெக்னிக்கலா ஏதோ கேக்குறாங்கன்னு தெரியுது, ஆனா என்ன கேக்குறாங்கன்னுதான் தெரியல..சரி விடுங்க..என்...

5. ட்ராய்...

வெள்ளி, ஜனவரி 13, 2006

கேபிள் டிவியில் லகான் படம் போட்டார்கள். பார்த்து நிறைய நாட்கள் ஆகியிருந்தாலும் படம் நன்றாகவே இருந்தது.(இங்கிலீஸ் சப் டைட்டில் உபயம்). நேற்று ட்ராய் ஆங்கிலத்தில் (ஆங்கிலப் படத்தை வேறு எதில் போடுவார்கள்!!) போட்டார்கள். ஏற்கெனவே பார்த்த படம்தான். நான் பார்த்த படங்களிலேயே மிகச் சிறந்த படமாக இதனைக் குறிப்பிடலாம். போரைத் தவிர்க்க நடக்கும், ஒண்டிக்கு ஒண்டி சண்டையில்...

4. ஒரு ஜோக்..

செவ்வாய், ஜனவரி 10, 2006

அது ஒரு கவர்மெண்ட் ஆஸ்பத்திரிங்க. காலங்காத்தால லேபுக்கு முன்னாடி நீளமான கியூங்க..வழக்கம் போல நம்ம லேப் அட்டண்டர் லேட்டா வந்தாருங்க. மொத ஆள கூப்பிட்டாரு, பேப்பர வாங்கிப் படிச்சாரு..பிளட் டெஸ்ட்..கைய நீட்ட சொன்னாரு, ஒரு பட்டைய கட்டினாரு..பளார், பளார்னு ரெண்டு அடி அடிச்சாரு..(நரம்ப கண்டு பிடிக்கிறாராமாம்..) ஊசியக் குத்தி இரத்தத்தை எடுத்தாரு..இதப் பார்த்துக்கிட்டு இருந்த நம்ம ரெண்டாவது ஆளு, ஒரு நிமிசம் யோசிச்சான், அப்புறமா அங்கேருந்து தல தெறிக்க...

3. பொழுது எப்படி போகுதுன்னா...

திங்கள், ஜனவரி 09, 2006

நான் ஒரு சினிமா பைத்தியங்க..(முழுசாவே பைத்தியந்தானே அப்படீங்றீங்களா??) வாரத்துக்கு நாலு படம் பாக்கலேன்னா எனக்கு தூக்கமே வராதுங்க. சேலத்தில வேல பாத்தப்பவுஞ் சரி, கோயமுத்தூர்ல வேல பாத்தப்பவுஞ் சரிங்க இதுதான் நமக்கு முக்கியமான வேலங்க.. என்னடா இவன் பாட்டுக்கு என்னமோ பேசிக்கிட்டு இருக்கனேன்னு பார்க்குறீங்களா? அதுக்குதான் வாரேன். அப்படி சினிமா, சினிமான்னு இருந்தவனை கொண்டு வந்து, நாடு முழுக்கவே ரெண்டே ரெண்டு தியேட்டர் இருக்கற ஊர்ல விட்டா என்ன...

2. தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாராட்டு

ஞாயிறு, ஜனவரி 08, 2006

அன்புள்ள தமிழ் கூறும் நல்லுலகமே,எனது பெயர் ராம்குமார். நான் கிழக்கு ஆப்பிரிக்காவில், உகாண்டாவில் வாழ்ந்து வருகிறேன். கண்டிப்பாக ஆப்பிரிக்கா நிறைய புது அனுபவங்களை தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த வலைதளம். இது தவிர, ஆங்கிலமும், தமிழும் மட்டுமே தெரிந்த, முக்கியமாக இந்தி தெரியாத ஒரு தமிழனாக நான் அனுபவித்த, அனுபவித்து கொண்டிருக்கும் சில பல இன்னல்கலையும் புலம்பி தீர்ப்பதாக உத்தேசம்.குஜராத்திளும், மளையாளிகளும், சுந்தர...

1. வந்துட்டான்யா...வந்துட்டான்யா...

ஞாயிறு, ஜனவரி 08, 2006

அன்புள்ள தமிழ் பெருங்குடி மக்களே...வந்து விட்டான் உங்கள் நண்பன் இராம்,எப்படியோ கஷ்டப்பட்டு தமிழ்-ல டைப் செஞ்சாலும், உங்கள கொடுமை படுத்துறதுன்னு முடிவு பண்ணிட்டேன். டைப் பண்ணுறதுக்கு கொஞ்சம் நேரம் ஆனாலும் பரவயில்லைனு தமிழ் தொண்டு புரிய வந்திருக்கிற என்ன நீங்க வரவேற்று வாழ்த்துவீங்கன்னு தெரியும்.வாழ்க வளமுடன்,இர...